கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் நேற்று(12-10-2023) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் - முழு விவரம் (Demands agreed upon yesterday (12-10-2023) in the meeting held in the presence of Hon'ble Minister of School Education, Director of School Education, Director of Elementary Education - Full Details)...



மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் நேற்று(12-10-2023) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் - முழு விவரம் (Demands agreed upon yesterday (12-10-2023) in the meeting held in the presence of Hon'ble Minister of School Education, Director of School Education, Director of Elementary Education - Full Details)...


 டிட்டோஜாக் மாநில அமைப்பின் சார்பில் 13.10.2023 இன்று சென்னை DPIவளாகத்தில் 30 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவதை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில் பேச்சு வார்த்தை 12.10.2023அன்று மாலை நடைபெற்றது.

பேச்சு வார்த்தையில்    

1. 1.1.2006 முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை மூன்று ‌நபர் குழு மூலமாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.                 

2.EMIS பதிவேற்றம் நவம்பர் முதல் தேதியிலிருந்து ஆசிரியர்கள் செய்ய வேண்டாம்.              

3. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இணைய சேவை செய்ய தேவையில்லை.     

4.ஆசிரியர்கள் கருத்தாளர்களாக ஜனவரி முதல் பயன்படுத்துவதில்லை.   ‌‌                       

5.பி.லிட். படித்து விட்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பி.எட்.படித்தபின் ஊதிய  உயர்வு பெறலாம்.தணிக்கைதடை‌நீக்கப்படும்.              

6.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும்.                 

7.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தமிழ்நாடு முழுவதும் 58 DI  பணியிடங்கள் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். ‌           

8. நிதி உதவி பள்ளிகளில் பணிபுரியும் 1500, ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க படும்.         

9.ஜாக்டோ‌ஜியோ போராட்டத்தில் வழக்கில் உள்ள ஆசிரியர்களுக்கு போடப்பட்ட FIR நீக்கப்படும்.                

10., TET தேர்ச்சி பெற்று பணிநாடும்  பணி நியமன தேர்வு அரசாணை எண் 149 நீக்கப்படும்.   ‌     

11. ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீடு மருத்துவ செலவு முழுவதும் வழங்க வேண்டும்.            ‌   

12. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரூ.5400 என்பதற்கு தணிக்கை தடை நீக்கப்படும்.               

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் நிறைவேற்றுவதாக உறுதி அளித்த அடிப்படையில் 13ந் தேதி ஆர்ப்பாட்டம் பேச்சு வார்த்தை விளக்க கூட்டமாக சென்னை எழும்பூர் ‌ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 13.10.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.ஆகவே தவறாமல் அணி திரண்டு சென்னை நோக்கி வரும்படி தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.      

இவண் 

சமரசமில்லா போராளி சி.சேகர் 

பொதுச் செயலாளர்  

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...