கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TETOJAC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு அரசுக்கு TETOJAC கோரிக்கைகள்



தமிழ்நாடு அரசுக்கு டிட்டோஜாக் பேரமைப்பு முன் வைக்கும் கோரிக்கைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டிட்டோஜாக் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுடன் சந்திப்பு



*1. அ) 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற சில மாநிலங்களைப் போல் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்திட வேண்டும்.*


*ஆ) தேர்வு எழுதிய பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, அவர்களது பணி அனுபவத்திற்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*இ) தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு அவர்களது உயர்கல்வித் தகுதிக்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*ஈ) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடத்திட்டத்தைத் தாண்டி கேட்கப்பட்ட சம்பந்தமில்லாத வினாக்களுக்குரிய மதிப்பெண்களை அனைவருக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும்.*


*2. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.*


*3. இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*4. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 1,76,000 ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் பிரிவு 23ல் திருத்தம் செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.*


*5.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.*


*6. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய அட்டவணையில் (Pay Matrix) Level -10க்கான Cell-45 உடன் முடிவடைந்து விட்ட நிலையில் வருடாந்திர ஊதிய உயர்வு பெற முடியாமல் இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் மிகக் கடுமையான ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்குஇது மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, ஊதிய அட்டவணையில் Level-10க்கு கூடுதல் கலங்களை உருவாக்கி Cell-45 லிருந்து Cell-50 வரை நீட்டித்து உரிய ஆணை வெளியிட வேண்டும்.*


*7. தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து வழங்கிய, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*8. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும். தொகுப்பூதிய நியமனங்கள் கூடாது.*


*9. அரசாணை எண்: 23 நிதி (ஊதியப் பிரிவு) துறை, நாள்: 12.01.2011ன் படி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் ரூ.5400- மற்றும் சிறப்பு நிலைக்குப் பெற்ற தர ஊதிய ரூ.5700- ஆகியவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் தணிக்கைப் பிரிவு விதித்துள்ள தவறான தணிக்கைத் தடைகளின் மீது பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பித்து 1500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பணப் பலன்கள் பெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும்.*


*10.(அ) பி.லிட் தகுதி பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.எட் உயர் கல்வித் தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடையால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இலட்சக்கணக்கில் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக தவறான இத்தணிக்கைத் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்.*


*(ஆ) அரசாணைகளின்படி M.com; B.Ed மற்றும் M.A (பொருளாதாரம்) ஆகிய உயர் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து விதிகளுக்குப் புறம்பாக, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணையை ரத்து செய்திட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.*


*11.அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றிப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும்.*


*12.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.*


*13.நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் விலக்கு அளித்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் அவரவர் பணியாற்றும் பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கேரள மாநில அரசு வழங்கியுள்ளதுபோல் 10 நாட்கள் தற்செயல் விடுப்பு அல்லது 20 அரைநாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கிட வேண்டும்.*


*இப்படிக்கு*


*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்*


TETOJAC Bearers Meeting with School Education Minister



மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் TETOJAC மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு குறித்த தகவல் 


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு

டிட்டோஜாக்

மாநில அமைப்பு

 நாள்:30.06.2026

********************


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு


* பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் குறித்து முறையீடு

*************************

* மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களான சுழல் முறைத் தலைவர் திரு ச.மயில்,திரு.ஈவேரா,திரு அ.வின்சென்ட் பால்ராஜ், திரு இரா.தாஸ்,திரு சி.சேகர் திரு.மன்றம் சண்முகநாதன்,திரு கோ.காமராஜ், திரு C.அரசு,திரு டி.ஆர்.ஜான் வெஸ்லி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் துணைப்பொதுச் செயலாளர் திரு. சாந்தகுமார் ஆகியோர் 29.06.2026 அன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நடைபெறவுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான நமது கோரிக்கைகள் தொடர்பாகவும், தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மிக முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்து, கோரிக்கை விண்ணப்பங்களை வழங்கினர்.


* கோரிக்கைகளை மிகவும் கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பணி நிரவல் கலந்தாய்வை ஒன்றியத்திற்குள் மட்டும் நடத்திடவும், விருப்பமுள்ளவர்களுக்கு வேறு ஒன்றியங்களுக்கு பணிநிரவல் அளித்திடவும், 2026-2027 ஆம் கல்வியாண்டில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு(Re-employment)வழங்குவது தொடர்பாக மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் பேசி ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்கள். அதற்காக டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


* மேலும், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மிக முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாகவும், தவறான தணிக்கைத் தடைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசுவதற்காக தனது அறைக்கு வருகை தந்து மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் 30 நிமிடங்களுக்கு மேல் கோரிக்கைகளை கேட்டறிந்தது பாராட்டுக்குரிய நிகழ்வாக அமைந்திருந்தது.

********************

 இப்படிக்கு

ச.மயில்

சுழல் முறைத் தலைவர்

டிட்டோஜாக்


தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் TETOJAC சந்திப்பு | கோரிக்கைகள்



 தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் TETOJAC சந்திப்பு | கோரிக்கைகள்


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு

டிட்டோஜாக்

மாநில அமைப்பு

 நாள்:29.06.2026

********************

 மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு-பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முறையீடு!

*************************

* டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று(29.06.2026) முற்பகல் சென்னையில் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேரில் சந்தித்து ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக எழுத்து மூலமான விண்ணப்பங்கள் அளித்து கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணக் கேட்டுக்கொண்டனர்.


* ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 02.07.2026 அன்று நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை, பதவி உயர்வு கலந்தாய்வு நடந்து முடிந்த பின்பு அதன் பிறகு உபரி பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, உபரி பணியிடங்கள் இருந்தால் ஒன்றியத்திற்குள் மட்டும் பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.


* 2026-2027ஆம் கல்வியாண்டில் பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதிவரை பணி நீட்டிப்பு (Re-employment) வழங்கப்பட வேண்டும். 30.06.2026 அன்று பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு  வழங்கிட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


* 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை (Special TET) முன்னிட்டு, 03.07.2026 அன்று நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (SMC) கூட்டத் தேதியை தள்ளி வைக்க வேண்டும்.


 * ஊதிய அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான நிலை 10ல், தளம்-45ஐ 50 வரை நீட்டித்து ஆணை வெளியிடப்பட வேண்டும்.


* ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு கால அட்டவணையில் 2 பட்டப்படிப்புகள் படித்துள்ளதை பல்கலைக்கழக மானியக்குழு(UGC) மற்றும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு,அது தொடர்பான தணிக்கைத் தடைகளை நீக்கிட வேண்டும்.


* தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் ரூ.5400, ரூ5700 ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தணிக்கைத் தடைகள் தொடர்பாகவும்,bஅது தொடர்பான ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும்  உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்.


* சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (Special TET)தேர்ச்சி மதிப்பெண்ணை மேற்குவங்க அரசு குறைத்துள்ளது போல், தமிழ்நாடு அரசும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அதில் ஆசிரியர்களின் பணி அனுபவம், உயர்கல்வித்தகுதி ஆகிவற்றுக்கு Weightage மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.


* இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனைக்குத் தீர்வு


* அரசாணை எண்: 243, நாள்:21.12.2023 ரத்து


* 10.03.2020 வரை ஊக்க ஊதிய உயர்வு பெறுவது தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள்


* ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பாக 2022 முதல் வருடாந்திர தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள்


* ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற உச்ச நீதிமன்றம் 31.08.2028 வரை அவகாசம் அளித்துள்ளதால், நியமன முன்னுரிமைப்படி நிபந்தனையுடன் பதவி உயர்வு வழங்கிட வேண்டுதல்.


* மேற்கண்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று (29.07.2026) மாலை நேரில் சந்தித்துப் பேசுமாறு மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.


* மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்களும் பங்கேற்றது சிறப்புக்குரியதாக அமைந்திருந்தது.








* இந்நிகழ்வுகளில் டிட்டோஜாக் சுழல் முறைத் தலைவர் திரு ச.மயில், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் திரு. ஈவேரா, திரு அ. வின்சென்ட் பால்ராஜ், திரு இரா. தாஸ், திரு சி.சேகர், திரு.மன்றம் நா.சண்முகநாதன், திரு கோ.காமராஜ்,  திரு சி.ஜெகநாதன், திரு டி.ஆர்.ஜான் வெஸ்லி, திரு C.அரசு மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளர் திரு.சாந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் TETOJAC தலைவர்கள் இன்று சந்திப்பு

 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் டிட்டோஜாக் தலைவர்கள் நாளை (இன்று) 20.01.2026 சந்திப்பு


*அவசர சுற்றறிக்கை*


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை (இன்று) சந்திக்க அழைப்பு


உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்


இன்று (நேற்று) 19.01.2026 மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்களை சந்திக்க TETOJAC சார்பில் சுழல் முறை தலைவர் இரா.தாஸ் உயர்மட்ட குழு உறுப்பினர் டிட்டோஜாக் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோரிக்கை சார்ந்து பேசப்பட்டது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை (இன்று) நேரில் பேச டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்களை அழைத்தார்


என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனவே அவசர அவசியம் கருதி டிட்டோஜாக் சார்பில் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் மட்டும் அவசியம் பங்கேற்க  வேண்டும் 


நாளை (இன்று) 20.1.2026


காலை 10:30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் 


அமைச்சர் அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை பேசிட கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


இரா.தாஸ்

சுழல் முறை தலைவர்

டிட்டோஜாக்


TETOJAC மாநில உயர்மட்டக்குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு

 

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு


டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் இன்று 08-12-2025 சென்னையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது. 


ஆசிரியர்கள் கைது

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் சென்னை எழும்பூரில் காத்திருப்பு போராட்டம் நடத்தியோர் கைது



இந்த போராட்டத்தின்  தொடர்ச்சியாக காவல்துறையின் ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக்  மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்தனர். 


அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஏற்கனவே கடந்த 12.08.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர். 


அது தொடர்பாக அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பும் அவரிடம் வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நான்கு கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆணைகள் விரைவில்  வெளியிடப்படும் என்று அமைச்சர் அவர்கள்  கூறிய விவரங்களும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. 


இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட  மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக  இன்றே உத்தரவுகள் வெளியிடுவதற்குரிய வாய்ப்பு இல்லை என்றாலும்,  இந்த நிமிடம் முதல் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நான் விரைவுபடுத்துகிறேன். 


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களோடு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்கள் .அந்த அடிப்படையில் அவருடைய பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது 


  அதன்பின்பு தலைமைச் செயலக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில்

 இன்று நடைபெற்ற ஒரு நாள் காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள சூழலில், இந்த போராட்டத்தை சென்னையில் தொடர்ந்து நடத்துவதை விட இந்த போராட்டத்தை ஒரு விரிவடைந்த போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .


அதன் அடிப்படையில் வருகிற 12/12/2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது


இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான டிட்டோஜாக் கூட்டங்களை 10-12-2025 அன்று நடத்த வேண்டும் என முடிவாற்றப்பட்டது


 அதன்பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு மீண்டும் கூடி அறிவிக்கும் 


டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள்



Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNPGTA அறிக்கை



TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNPGTA அறிக்கை


TNPGTA மாநிலக் கழக கண்டன செய்தி

🌑🌑🌑🌑🌑🌑🌑 


*பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தொடக்க கல்வி கோரிக்கைகள் சார்ந்து டிட்டோஜாக் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கல்வித்துறை DPI இயக்குனர் அலுவலகத்தில்  காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு செய்து நாளை காலை போராட்டத்திற்கு புறப்பட தயாரான  நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் விரோத போக்கை TNPGTA பேரியக்கம் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.* 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*காவல்துறையை வைத்து கோழைத்தனமாக அடக்கு முறையை கையாண்டிருக்கும் தமிழக அரசின் அடக்குமுறைக்கு TNPGTA சார்பாக கண்டனங்கள்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*அடக்கு முறையை கையாள கையால தமிழக மண்ணில் வீரியமான போராட்டங்கள்  தமிழக மண்ணில்  கடும் கோபத்துடன் இருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களால் தமிழக அரசுக்கு எதிராக கட்டமைக்கப்படும்*

 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்தி ஆசிரியர் அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றிட உருப்படியான முயற்சிகளை செய்திட TNPGTA பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்*


🌑🌑🌑🌑🌑🌑🌑🌑


மாநிலக் கழகத்தின் சார்பாக


*பொ.அன்பழகன்*

 மாநில பொதுச் செயலாளர்

*TNPGTA*


Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNHHSSGTA அறிக்கை

 

 

TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNHHSSGTA அறிக்கை


*TNHHSSGTA மாநில அமைப்பு கண்டன அறிக்கை*

****************************************

*கண்டிக்கிறோம்* *கண்டிக்கிறோம்*

*****************************************

*டிட்டோஜாக் தலைவர்கள் கைது , வீட்டுக்காவல் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது*


      *தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித் துறையில் செயல்பட்டு வரும் ஆசிரியர் இயக்கங்கள் இணைந்த கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பல்வேறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளுக்காக அரசுக்கு முன்கூட்டியே அறிவிப்பாணை வழங்கி நாளை 8.12.2025 திங்கள்கிழமை சென்னை DPI வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில்*

       *இயக்க பொறுப்பாளர்களிடம் கோரிக்கையில் குறித்து அழைத்து பேசி தீர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்தும் வீட்டுக்காவலில் வைத்தும் வருவதாக தகவல்கள் வருகிறது*

      *கோரிக்கைகளுக்காக அறவழிப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்க பொறுப்பாளர்களை கைது செய்வதை அல்லது வீட்டுக்காவலில் வைப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந் நடவடிக்கையை உடனடியாக  தமிழக அரசு கைவிட்டு டிட்டோஜாக் நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.*

      *மேலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை அடக்கு முறையை கையாள நினைத்தால் தமிழக அரசுக்கு அது பலனளிக்காது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்*

              இவண்

முனைவர் *அ. மாயவன்* Ex MLC

நிறுவனத் தலைவர்


*சி.ஜெயக்குமார்*

மாநிலத் தலைவர்


*மா .குமரேசன்*

மாநில பொதுச் செயலாளர்


*ம. விஜய சாரதி*

மாநில பொருளாளர்


*மு.மாயகிருஷ்ணன்*

மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*


Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




TETOJAC மாநில பொதுக்குழு கூட்டம் குறித்த தகவல்

 

 டிட்டோஜாக் மாநில பொதுக்குழு கூட்டம் குறித்த தகவல் 


 TETOJAC மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (25.11.2025) நடைபெறுகிறது



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8





TETOJAC மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் : முக்கிய முடிவுகள் அறிவிப்பு




TETOJAC மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் : முக்கிய முடிவுகள் அறிவிப்பு


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்)

மாநில அமைப்பு

நாள் : 27.09.2025

*********************

 சென்னையில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம்

முக்கிய முடிவுகள் அறிவிப்பு


* மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அரசு துறைகளின் முதன்மைச் செயலாளர்களுடன் டிட்டோஜாக் சந்திப்பு.


* ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல்


* சென்னையில் மூத்த வழக்கறிஞருடன் சந்திப்பு


* டிட்டோஜாக் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது  மறுசீராய்வு மனு தாக்கல்

*********************

 * தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 25.09.2025 அன்று சென்னையில்  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் திரு இரா.தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு


* தீர்மானம் எண்:1

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசம் முழுவதும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசே மறுசீராய்வு மனு தாக்கல் செய்திடக் கோரியும், பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் பிரிவு 23இல் திருத்தம் செய்து பணியில் இருக்கும் ஆசிரியர்களைப் பாதுகாத்திடக் கோரியும் வலியுறுத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக 08.10.2025 புதன்கிழமை மாலை டிட்டோஜாக்  பேரமைப்பின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.


* தீர்மானம் எண்: 2

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்கும் வகையில், பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009இன் பிரிவு 23இல் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு அழுத்தம் அளித்திட ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் டிட்டோஜாக் மாவட்டப் பொறுப்பாளர்கள்  ஒரு வாரத்திற்குள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது


* தீர்மானம் எண்: 3

 * ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீது டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதெனவும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்வதெனவும் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.


* தீர்மானம் எண்: 4

 * டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கான செலவினங்களை டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்கள் பகிர்ந்து கொள்வதெனவும், டிட்டோஜாக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மறுசீராய்வு மனுவில் ஒவ்வொரு இணைப்புச் சங்கத்தின் சார்பிலும் 100  ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதெனவும் ஏக மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.


* மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு டாக்டர். சந்தரமோகன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் விரிவாக எடுத்துக் கூறியதோடு, இன்று (25.09.2025)  அல்லது நாளைக்குள் (26.09.2025) தமிழ்நாடு அரசின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சார்ந்து மறுசீராய்வு மனு  தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்கள். மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் கருத்துகள்  தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு கொண்டுள்ள அக்கறையை உணர்த்துவதாகவும், மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.


 * இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில்  நிதித்துறைச் செயலாளர் மதிப்புமிகு. உதயச்சந்திரன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் தொடர்பான  தவறான தணிக்கைத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு தணிக்கைத் தடைகள் சார்ந்தும் முறையிட்டனர்.


* அதனைத் தொடர்ந்து மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் விரைந்து ஆணைகளை வழங்கிடக் கேட்டுக் கொண்டனர்.


* அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு. தங்கம் தென்னரசு அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்த மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தவறான தணிக்கைத் தடைகள் உள்ளிட்டவை மீது தீர்வுகாண வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.


* அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. சங்கரன் அவர்களை மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தனர்.

*********************

 இப்படிக்கு

மாநில உயர்மட்டக் குழு

டிட்டோஜாக்


BLO பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் டிட்டோஜாக் மனு

 

 வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் டிட்டோஜாக் மனு


TETOJAC petitions the District Collector seeking the release of teachers from the BLO duties



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு - 13.09.2025 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட முடிவுகள்

 

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சம்பந்தமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு 13.09.2025 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட முடிவுகள்


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்)

மாநில அமைப்பு

நாள்: 13.09.2025

****************** 

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு!


டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம்


* உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு பி.வில்சன்,M.P அவர்களுடன் சந்திப்பு!

******************** 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேற்று (13.09.2025) காலை 8:30 மணிக்கு சென்னையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின் போது ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) தொடர்பாக 01.09.2025 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புத் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு (Review petition) தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் நிலைகுலைந்து நின்ற தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருவதற்கும் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


* மேலும், டிட்டோஜாக் பேரமைப்பு முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் சார்ந்து விரைவில் உரிய ஆணைகள் பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடனான சந்திப்பு திருப்திகரமாகவும், பயனுள்ளதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்திருந்தது.இந்நிகழ்வில் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு சார்ந்து பல்வேறு சட்டப்பூர்வக் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.டிட்டோஜாக் சார்பிலும் பல்வேறு முக்கியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.


* அதனைத் தொடர்ந்து முற்பகல் 11:30 மணிக்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான திரு இரா.தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக டிட்டோஜாக் சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை சார்ந்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்குரிய பணிகளை டிட்டோஜாக் சார்பில் துரிதகதியில் மேற்கொள்ள ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள 10 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து உரிய ஆணைகள் பெற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது


  * மாலை 4.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்களுடன் இணைந்து உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு பி.வில்சன் அவர்களை டிட்டோஜாக்  மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) சம்பந்தமான உச்சநீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மதிப்புமிகு வழக்கறிஞர் அவர்கள் தனது மேலான ஆலோசனைகளை வழங்கினார். இப்பிரச்சனையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

*******************

இப்படிக்கு

 மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் டிட்டோஜாக்

அமைச்சருடன் TETOJAC பேச்சுவார்த்தை தகவல்



அமைச்சருடன் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை தகவல்


டிட்டோஜாக் பேரமைப்பின் பேச்சு  வார்த்தையின் இறுதியில்


கல்வி அமைச்சர் நமது கோரிக்கைகளை சார்ந்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்.



அதைத்தொடர்ந்து இன்று 3 மணிக்கு டிட்டோஜாக் பேரமைப்பின்  உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது


TETOJAC அமைப்புடன் பள்ளிக் கல்வி அமைச்சர் இன்று 18.08.2025 பேச்சுவார்த்தை - DEE Proceedings

 

டிட்டோஜாக் அமைப்புடன் பள்ளிக் கல்வி அமைச்சர் இன்று 18.08.2025 பேச்சுவார்த்தை - DEE செயல்முறைகள்


Minister of School Education to hold talks with TETOJAC today 18.08.2025 - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அமைச்சர் தலைமையில் TETOJAC பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை - DEE Proceedings

 

  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் TETOJAC பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை - DEE Proceedings 


டிட்டோஜாக் பொறுப்பாளர்களை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 14.08.2025 அன்று நடைபெறும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு. 


மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநரின் அழைப்புக் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TETOJAC கோட்டை முற்றுகைப் போராட்டம் Notice

 


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோட்டை முற்றுகைப் போராட்டம் கோரிக்கைகள் நோட்டீஸ்


Tamilnadu Elementary school Teachers' Organizations Joint Action Committee Fort Siege Protest Demands Notice



TETOJAC கோட்டை முற்றுகைப் போராட்டம் Notice 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கோட்டை முற்றுகைப் போராட்ட கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்


கோட்டை முற்றுகைப் போராட்ட மாவட்ட ஆயத்த கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்


*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு*

*(டிட்டோஜாக்)* 

*மாநில  உயர்மட்டக்குழு*

*நாள்:01.08.2025*

**********************

*2025 ஆகஸ்ட் 2,3 தேதிகளில் கோட்டை முற்றுகைப் போராட்ட மாவட்ட  ஆயத்தக் கூட்டங்கள்!*


*மாவட்டங்களில் பங்கேற்கும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில நிர்வாகிகளின் பட்டியல்!*

**********************

*23.07.2025 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழு முடிவின்படி 2025 ஆகஸ்ட் 22 அன்று 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வலிமையுடன் நடத்திட சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள ஏதுவாக  02.08.2025, 03.08.2025 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தீர்மானிக்கும் ஏதாவது ஒரு நாளில் மாவட்ட அளவிலான முற்றுகைப் போராட்ட ஆயத்தக் கூட்டங்களை தவறாது நடத்திட வேண்டும் என முடிவாற்றப்பட்டது.*


*எனவே,அதற்குரிய உடனடி ஏற்பாடுகளையும், கூட்ட அறிவிப்புகளையும் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக வெளியிட வேண்டும். அக்கூட்டங்களில் பங்கேற்கும் டிட்டோஜாக்  இணைப்புச் சங்கங்களின் மாநில நிர்வாகிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.கூட்டத்தை பேரெழுச்சியுடன் நடத்திட டிட்டோஜாக் மாவட்ட  அமைப்புகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

**********************  

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு



>>> மாவட்ட ஆயத்த கூட்டங்களில் பங்கேற்கும் TETOJAC மாநில நிர்வாகிகளின் பட்டியல்

TETOJAC உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு

டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு


 டிட்டோஜாக் சார்பில் பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் டிடோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு மற்றும் போராட்ட அறிவிப்பு ஆகியவற்றை வழங்கி ஏறக்குறைய 2மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் நல்ல தீர்வு காண முயற்சிப்பதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்







TETOJAC பேரமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்



TETOJAC பேரமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்



23.07.2025 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC மாநில பொதுக்குழுக் கூட்டம் பற்றிய தகவல்

TETOJAC மாநில பொதுக்குழுக் கூட்டம் பற்றிய தகவல்


எதிர்வரும் 23.07.2025 இல் டிட்டோஜாக் மாநில பொதுக்குழுக் கூட்டம்



TETOJAC மறியல் போராட்டம் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்



 டிட்டோஜாக் மறியல் போராட்டம் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்


TETOJAC மறியல் போராட்டம் காரணமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திலிருந்து மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப்பணியில் செல்லும் ஆசிரியர்கள்


டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இரண்டு நாள் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளிகளை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


எனவே அருகில் உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் அதிக அளவில் பள்ளிக்குச் செல்லக்கூடிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


கிணத்துக்கடவு வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்