கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Microsoft is shutting down Skype

 


Skype-க்கு விடை கொடுக்கிறது மைக்ரோசாஃப்ட்


Microsoft is shutting down Skype


Skype-யை மூடும் மைக்ரோசாஃப்ட்


இதன் Credential-கள் மூலம் வரும் மே மாதத்திலிருந்து Microsoft Teams-ல் லாகின் செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 


சுமார் 20 வருடங்களாக internet-based phone and video சேவைகளை வழங்கி வந்த Skype-ன் நினைவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கிய நெட்டிசன்கள்.


வரும் மே மாதம் 5-ம் தேதி உடன் ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.


கடந்த 2003-ல் ஸ்கைப் அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வழி உரையாடல், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். டெஸ்க்டாப் உள்ளிட்ட கணினி மற்றும் மொபைல் போனில் இதை பயன்படுத்த முடியும். 2005-ல் 50 மில்லியன் பயனர்களை ஸ்கைப் தளம் எட்டியது.


ஸ்கைப் பயனர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டு டீம்ஸில் லாக்-இன் செய்யலாம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. அதன் மூலம் பழைய சாட்கள் மற்றும் கான்டக்ட்ஸ் போன்றவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கட்டண சந்தா பயன்பாட்டை ஸ்கைப் தளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுத்தி உள்ளது.


நவீன கம்யூனிகேஷன்ஸ் சார்ந்து டீம்ஸ் தளத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் இந்த நகர்வை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்துள்ளது. ஸ்கைப் பயனர்கள் மே 5-ம் தேதி வரையில் அந்த தளத்தை பயன்படுத்தலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Issue of giving sweets in school on Political Leader Birthday - Assistant Headmistress transferred

 பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம் - உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் Issue of giving sweets in school on Political Leader Birthday - Assi...