15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது - டெல்லி பாஜக அரசு அதிரடி
No fuel for 15 year old vehicles - Delhi BJP Govt takes action
டெல்லியில் ஏற்கனவே 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான டீசல், 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான பெட்ரோல் வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு இந்த விதி மேலும் தீவிரமாக்கப்பட்டது. 2022 ஜனவரி 1-க்கு பின்பு இந்த விதியை மீறுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி முதல் பெட்ரோல் வழங்கப்படாது என்று டெல்லி பாஜக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.