கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு

 



காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சோகம்


ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் கார் கதவுகள் ஆட்டோ லாக் ஆனதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு.


வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது காரின் கதவுகள் தானாக மூடிய நிலையில் வெளியே வர முடியாததால் மூச்சுத் திணறி உயிரிழப்பு. 


பக்கத்து வீட்டில் திருமண விழா இருந்ததால், குழந்தைகள் அங்கு சென்றிருப்பார்கள் என நினைத்து நீண்ட நேரம் பெற்றோர் தேடவில்லை.


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடி கிராமத்தில் காருக்குள் சிக்கி மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடியைச் சேர்ந்த பார்லி ஆனந்த் – உமா தம்பதியினரின் மகள்கள் சாருமதி (8), சாரிஷ்மா (6), அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் – அருணா தம்பதியின் மகள் மானஸ்வி (6) மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பவானியின் மகளான உதய் (8) ஆகிய 3 குடும்பமும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் அருகில் திருமண விழா நடைபெற்று வந்த நிலையில், அங்கு பாடல் ஒளிபரப்பப்பட்டு இருந்தது.


இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டின் அருகே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று குழந்தைகள் விளையாடியுள்ளனர். காருக்குள் அமர்ந்து விளையாடியபோது திடீரென்று காரின் கதவு தானாக மூடிக்கொண்டது. கார் கதவுகள் ஆட்டோ லாக் ஆன நிலையில் வெளியே வர முடியாத குழந்தைகள் கூச்சலிட்டனர். அவர்கள் கத்தியது பாட்டு சத்தத்தில் கேட்காததால் 4 பேரும் காருக்குள் மூச்சுத் திணறி மயக்கமடைந்தார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரியவந்தது.


இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நான்கு பேரையும் மீட்ட பெற்றோர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் துவாரபூடி கிராமத்தில் துக்கச் சூழல் நிலவியது. மரணமடைந்த சிறுவர், சிறுமிகளின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Report ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

SLAS Report ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் SLAS Report யினை அனைவரும்...