கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Airtel mobile சேவை பாதிப்பு


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு


Airtel mobile service affected


மாநிலம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார்




ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


சென்னையில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் ஏர்டெல் எங்களை தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக ஏர்டெல் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இன்று தமிழகம் மட்டுமின்றி பெங்களூரிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடுமையான நெட்வொர்க் கால் சேவையில் சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த மொபைல் சேவை பாதிப்பு சுமார் 2 மணிநேரமாக நீடித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை பதிவு செய்து வருகின்றன. இந்த சிக்கலுக்கான காரணம் குறித்து பார்தி ஏர்டெல் தரப்பில் இன்னும் சரியான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மே 13, 2025 இன்று அதன் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நிகர லாபம் PAT பின்பு 77% உயர்ந்து ரூ.5,223 கோடியாக பதிவு செய்துள்ளது. மேலும் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16 ரூபாய் டிவிடெண்ட் கொடுப்பதாக அறிவித்துள்ளது.


லாபத்தில் இயங்குவதாக கணக்கு காட்டியுள்ள ஏர்டெல் சேவையின் தற்போதய நெட்வொர்க் முடக்கம் தமிழ்நாட்டில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"தேசியக் கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை" நூல் விமர்சனம்

  "தேசியக் கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை" நூல் விமர்சனம்  Book Review: "The Rogue Elephant alias National Education Policy ...