கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - Conducting "Kalai Thiruvizha" competitions - Guidelines



2025-2026 ஆம் ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத்திருவிழா" "Kalai Thiruvizha" போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


2025-2026 - Conducting "Art Festival" competitions in government and government aided schools - Guidelines - SPD, DSE & DEE Joint Proceedings 


பள்ளிக் கல்வி - 2025-26 - கல்வி சாரா செயல்பாடுகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத் திருவிழா" போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்.2220/ ஆ8 / கலைத்திருவிழா/ ஒபக/ 2025, நாள்: 24.07.2025 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 4 முதல் கலை திருவிழா போட்டிகள்


 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது


 


 இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


1) 1,2 ம் வகுப்புகள், 

2) 3, 4, 5-ம் வகுப்புகள், 

3) 6, 7, 8-ம் வகுப்புகள், 

4) 9, 10-ம் வகுப்புகள்,

5) 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.


*தலைப்பு*


 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும்.


*போட்டிகள்*


 கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை,

 உடுக்கை, 

பறை, 

மிருதங்கம், 

டிரம்ஸ், 

வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.


👉 *பள்ளி அளவில் போட்டிகள்*


 ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். 


 👉 *குறுவட்ட அளவில்* 

ஆகஸ்ட்.25 முதல் 29 வரை. 


👉 *வட்டார அளவில்*

 அக்டோபர். 13 முதல் அக்டோபர் 17 வரை

👉 *மாவட்ட அளவில்* 

அக்டோபர்.27 முதல் அக்டோபர் 31 வரை)


👉 *மாநில அளவில்*

 நவம்பர்.24 முதல் நவம்பர் 28 வரை


 போட்டிகள் நடைபெறும்.



தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 4 முதல் கலை திருவிழா போட்டிகள்


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


1,2 ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.


முதல்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். அதை தொடர்ந்து, குறுவட்ட அளவில் (ஆக.25 முதல் 29), வட்டார அளவில் (அக். 13 முதல் 17), மாவட்ட அளவில் (அக்.27 முதல் 31), மாநில அளவில் (நவ.24 முதல் 28) போட்டிகள் நடைபெறும்.


மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


👉மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். 


👉 தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். 


நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School working days for 2026-2027 AY | Revised list of working days

  2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம் (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்) Details of school working days for the 2026-202...