கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு



..................................................................


.*'' சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு..''*

.....................................................................


‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம். 


சரி, மரியாதை என்றால் என்ன?


*நம்முடைய நற்குணங்கள், நற்செயல்கள், நன்னடத்தை நமக்குச் சமுதாயத்தில் தேடித் தரும் நன்மதிப்பு தான் மரியாதை ஆகும்*. 


பணம், பதவியினால் வரும் மதிப்பு நிலையானதன்று; பணமும், பதவியும் நம்மை விட்டுச் செல்லும் போது, மதிப்பும், மரியாதையும் நம்மை விட்டுச் சென்று விடும்.


ஒருவர் உடல்நலம் குன்றி ஓய்வு எடுக்கும் போது, நாம் அவரை மரியாதை நிமித்தமாக நலம் விசாரிப்பது மனித நேயம் மிக்க செயல். மனிதப் பண்பாடும் அது தான்.


ஆனால் செல்வமும், செல்வாக்கும் உடையவரை சிலர் அடிக்கடி சந்திப்பதை நாம் பார்க்கிறோம். 


ஒரு சாதாரண மனிதரை அப்படி யாரும் சந்திப்பது இல்லையே ஏன் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 


*பணம் , பதவி படைத்தோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது.* 


இன்று ஒரு வணக்கம் போட்டு வைத்தால், நாளை ஒன்றுக்குப் பயன்படும் என்னும் நினைப்பில் தன்னலம் இருக்கிறது அல்லவா.?


காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுவதை ஒரு கலையாகக் கற்று ஒரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு ஒரு நண்பர் வந்து விட்டார். 


உனது உயர்நிலையை எண்ணியாவது இனிமேல் காலில் விழுவதைக் கைவிடுக என்று அவருடைய நண்பர் அறிவுரை அவருக்குக் கூறினார். 


நான் இப்படி விழுந்து, விழுந்து தான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதை மட்டும் என்னால் கைவிட முடியாது’ என்று மறுமொழி சொன்னார். 


காலமாறுதலில், எதிர்பாராதவை சில நடக்கக் கூடும். இப்படிக் காலில் விழுந்து கிடப்பவர்களை சிலர் விரும்பி ,வரவேற்று மகிழலாம். 


ஆனால் காலப்போக்கில் காலைத் தொட்டுத் தொழுது கிடப்பவன், காலை வாரி விடவும் தயங்க மாட்டான்.


காலில் விழுந்து கிடப்பவனை அவனது உண்மையான பண்பு அறிந்தவர்கள் ஒதுக்கி விடுவதும் ஒரு கட்டத்தில் நடக்கக் கூடும். 


நடிப்பும் நயவஞ்சகமும் நீண்ட நாள் வெற்றி பெற முடியாது அல்லவா?


சுயமரியாதை இழந்து, குனிந்து கும்பிட்டுக் கிடப்பவர்கள் வாழ்வில் ஒருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும், 


நாம் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து நமது சுயமரியாதையைக் காயப்படுத்தி விடக்கூடாது. 


*ஆம்.,தோழர்களே..,*


*நம்முடைய நற்செயல்கள், நன்னடத்தை குறித்து நாம் பெருமையும், பெருமிதமும் கொள்வது நமக்குச் சுயமரியாதை உணர்வை உருவாக்கும்; அடிமை மனத்தை அகற்றும்.*


*சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு,எழிலார்ந்த ஏற்றம் மிகு வாழ்வு,* 


*உயிரனைய உரிமை வாழ்வு என்பதை மனதில் நிறுத்தி மாண்புற வாழ்வோம்.*


*தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தொண்டறம் செய்து மனிதநேயத்தோடு வாழ்வோம்!✍🏼🌹*


வாழ்க்கை மிக அழகானது - ரசித்துக் கொண்டே வாழுங்கள் - சவால்களுக்கும், அவற்றை கொடுத்தவர்களுக்கும் நன்றி கூறுங்கள் (Life is beautiful - enjoy it - be thankful for challenges and those who give them)...


வாழ்க்கை மிக அழகானது - ரசித்துக் கொண்டே வாழுங்கள் - சவால்களுக்கும், அவற்றை கொடுத்தவர்களுக்கும் நன்றி கூறுங்கள் (Life is beautiful - enjoy it - be thankful for challenges and those who give them)...


பூமியில் விழுந்த  விதை கூட எதிர்ப்பை சமாளித்து முளைத்து காட்டுகிறது...

 


ஒவ்வொரு நாளும்

காட்டில் சிங்கத்தால்

கொல்லப்படுகின்ற நிலையில்

உயிர் வாழும் மான் கூட

பிரச்சனைகளை சமாளிக்கின்றது 


பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக

விழுங்கப்படும் நிலையிலிருக்கும்

சிறிய மீன்களும் கடலில்

புலம்பாமல் வாழ்கின்றன 


மனிதர்களால் எப்பொழுது

வேண்டுமானாலும்

வெட்டப்படுகின்ற வாழ்க்கையை

அனுபவிக்கின்ற மரங்களும்

நிமிர்ந்து நிற்கின்றன 


ஒவ்வொரு நாளும்

ஆகாரத்திற்காக பல மைல்கள்

தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்

முயற்சி செய்கின்றன 


சிறியதான உடலையும்,

பல கஷ்டங்களையும் சமாளிக்க

வேண்டிய கட்டாயத்திலிருக்கும்

எறும்புகள் கூட துவண்டு போகாமல்

வாழ்ந்து காட்டுகின்றன 


தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்

உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்

ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன 


ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை

என்ற நிலையிலிருக்கும் பலவகை

பூச்சிகளும், அந்த ஒரு நாளில்

உருப்படியாக வாழ்கின்றன 


இப்படி பலகோடி உயிரினங்கள்

உலகில் வாழ முடியுமென்றால்

உங்களால் வாழ முடியாதோ 


எப்படியும் வாழ்ந்தே 

ஆகவேண்டிய வாழ்க்கை 

அதை ஏன் புலம்பிக்கொண்டு

வாழ்கின்றீர்கள்...,


அதை ஏன் நொந்துபோய்

வாழ்கின்றீர்கள்...,


அதை ஏன் வெறுத்துக்கொண்டு

வாழ்கின்றீர்கள்...,


அதை ஏன் தப்பிக்கப் வாழ்கின்றீர்கள்..., 

அதை ஏன் அழுதுகொண்டு

வாழ்கின்றீர்கள்...,


சந்தோஷமாகத்தான் 

வாழ்ந்து பாருங்களேன்...


எனக்குப் பணிவைத்தந்த என் கஷ்டங்களுக்கு

மனதார நன்றி 


என்னை அவமரியாதை செய்து

எனக்கு வைராக்கியம் வரக்காரணமான

என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி 


எனக்கு வலியைத்தந்து

அடுத்தவரின் வலியை எனக்குப்

புரியவைத்த புரியாத நோய்களுக்கு

மனதார நன்றி 


எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடி சொல்லிக்கொடுத்த,

என் பலவீனத்திற்கும், உடலுக்கும்

மனதார நன்றி 


என்னை ஆழமாக சிந்திக்கவைக்க

எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த

என்னுடைய பிரச்சனைகளுக்கு

மனதார நன்றி 


என் பலத்தை நான் உணர்ந்து

என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு

மனதார நன்றி 


என் உடல் உறுப்புகளின் மதிப்பை

எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த

மாற்றுத் திறனாளிகளுக்கு

என் மனதார நன்றி 


மனித வாழ்க்கை நிலையில்லாதது

என்பதை எனக்குத் தெளிவாகப்

புரியவைத்த மரணத்திற்கு

மனதார நன்றி 


என் பெற்றோரின் பெருமையை,

என் புத்தியில் அழுத்தமாய் பதித்த

அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு

மனதார நன்றி 


ஒரு சிரிப்பினால் உலகையே

வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்

சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு

மனதார நன்றி 


பணத்தினால் மட்டுமே வாழ்வில்

எல்லா சுகமும் கிடைத்துவிடாது

என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத

பணக்காரர்களுக்கு மனதார நன்றி 


ஒவ்வொரு முறையும் மனிதர்களிடம்

ஏமாந்துக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் எனக்கு,

அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய

என் இறைவனுக்கு மனதார நன்றி 


இன்னும் பலருக்கு நன்றி சொல்லவேண்டும் 

இந்த வாழ்நாள் போதாது 


வாழ்க வளமுடன்....


🌷🌷






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...