நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தனியார்
விமானநிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கேரளாவின் பட்டணம்திட்டா
மாவட்டம் ஆரண்முலாவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கே.ஜி.எஸ்.ஆரண்முலா சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான
நிலையத்திற்கு ஏர் போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் அதிகாரிகள் குழு
பார்வையிட்டனர். முன்னதாக தனியார் விமான நிலையத்தின் அதிகாரியான நந்த
குமார் கூறுகையில் சபரி மலை திருவிழா துவங்கும் நேரத்தில் விமான
நிலையம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் பக்தர்கள் விமான நிலையத்தை
பயன்படுத்திக்கொள்ள வசதியாக அமையும் என தெரிவித்தார். இந்நிலையில் விமான
நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவி்த்தது குறித்து கருத்து தெரிவித்த
அவர் ஐக்கிய நாட்டு வளர்ச்சித்திட்ட சார்பில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக
அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை கவனத்தில் கொண்டு விமானநிலையம்
கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு ஏற்கனவே நிலம்
கையகப்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் யாரும் இடம் பெயர்ந்து செல்ல
கட்டாயப்படுத்தப்பட வில்லை என தெரிவித்துளளார். இந்த விமான நிலைய திட்டத்தில் மாநில அரச பங்குதாரராக சேர்த்துக்கொள்ளப்பபட வில்லை எனவும் அவர் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>காலாண்டுத் தேர்வு கேள்வித்தாள்: தனியார் நோட்சில் முன்பே "ரிலீஸ்'
தமிழகத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், கணிதம் மற்றும் அறிவியல்
தேர்வின் கேள்வித்தாள், தனியாரின் நோட்சில் அச்சு பிசகாமல்
இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இம்மாதம், 14ம்
தேதி காலாண்டுத் தேர்வு துவங்கி, 25ம் தேதியுடன் முடிந்தது. அரசின் உத்தரவை
அடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வை போல, பிற வகுப்புகளுக்கும்
ஒட்டுமொத்தமாக, ஒரே மாதிரியான கேள்வித்தாளும், ஒரே நாளில் தேர்வும்
நடத்தப்பட்டன. காலாண்டுத் தேர்வில், ஏழாம் வகுப்பு கணிதத் தேர்வில், அரசு
வழங்கிய கேள்வித்தாளை பார்த்த, மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நோட்சின் மாதிரித்தாளில் உள்ள கேள்விகள் பலவும், அச்சுப்பிசகாமல் அப்படியே
கேட்கப்பட்டிருந்தன. இதையறிந்த சில பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம்,
அடுத்து வரும் அறிவியல் பாடத் தேர்வுக்கும், நோட்சில் உள்ள, மாதிரி
கேள்வித்தாளில் உள்ளனவற்றை படிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். தேர்வுக்கு
சென்ற மாணவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அறிவியல் தேர்வில்
கேட்கப்பட்டிருந்த, 95 சதவீதம் கேள்விகள், நோட்சில் இருந்த
கேள்விகளாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, நோட்சில் இருந்த, மாதிரி
கேள்வித்தாளின் வரிசைப்படியே, அரசு கேள்வித்தாளிலும், வரிசைப்படுத்தி,
அச்சு பிசகாமல் கேட்டிருந்தனர். தேர்வை எழுதிய மாணவர்கள், நோட்சை
தேடி, கடை கடையாக அலைந்துள்ளனர். கிடைத்தவர்கள் வாங்கி வந்து, எஞ்சிய சமூக
அறிவியல் தேர்வுக்கும் படித்துள்ளனர். ஆனால், சமூக அறிவியல் தேர்வு
கேள்வித்தாள் முற்றிலும் மாறுபட்டிருந்தது. தனியார் நிறுவன நோட்சின்,
மாதிரி கேள்வித்தாளுடன், 95 சதவீதம் ஒத்துப்போகும்படி, காலாண்டுத்
தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரித்தது எப்படி சாத்தியம் என்ற கேள்வி
எழுந்துள்ளது.
>>>பிளஸ் 2 தனி தேர்வருக்கு நாளை, "ஹால் டிக்கெட்'
பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், "ஹால் டிக்கெட்'
வழங்கப்படுகிறது.தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு
நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை
முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி
மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும். மாணவ,
மாணவியர், ஹால் டிக்கெட்டை பெற்றதும், அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து,
பிழைகள் இருப்பின், உடனே, தேர்வுத் துறையை அணுகலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
>>>137 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் உள்ளூர் திட்டக்குழுமம் அதிரடி
விதிமுறை மீறி கட்டப்பட்ட 137 கல்லூரி கட்டடங்களுக்கு, கோவை உள்ளூர்
திட்டக்குழுமம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் கட்டட அனுமதிக்காக, விண்ணப்பிக்கும் கல்லூரி நிர்வாகங்கள்,
அனுமதிக்கப்பட்டதை விட, அதிக தளங்கள் அமைத்து கட்டியிருப்பதும்,
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கட்டியிருப்பதும், சமீபத்தில் உள்ளூர்
திட்டக் குழுமம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து,
இக்கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை உள்ளூர் திட்டக்குழும
அதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமுறைக்கு புறம்பாக கட்டடம் கட்டியுள்ள, 137
கல்லூரி நிர்வாகங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான
இக்கல்லூரிகள், புறநகரில்தான் அமைந்துள்ளன. சில கல்லூரி நிர்வாகிகள்,
பஞ்சாயத்து தலைவரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். 2,000 சதுரடி பரப்பளவில் கடை
கட்டவும், 4,000 சதுரடி பரப்பளவில் வீடு கட்டவும் மட்டுமே, பஞ்சாயத்து
தலைவரின் அனுமதி பெற வேண்டும். சிலர் அனுமதியே வாங்காமல் பள்ளி, கல்லூரி,
தொழிற்சாலைகள் கட்டியுள்ளனர். ஒரு மாத காலத்துக்குள், கட்டடத்தின்
விதிமுறைகளை, சரி செய்து கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உரிய
நடவடிக்கை எடுக்கத் தவறும் கட்டடங்களை, இடிப்பதா, "சீல்' வைப்பதா, அபராதம்
விதிப்பதா என்பதை, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
>>>அக். 14ல் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான
தேர்வும் அக்., 14ல் நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு அக்.,3ல் நடப்பதாக முதலில்
அறிவிக்கப்பட்டது. தற்போது பி.எட்., படிப்பு முடித்தவர்களுக்கும்
வாய்ப்பளித்து, இந்த தேர்வு அக்., 14க்கு தள்ளி வைக்கப்பட்டது. அதே நாளில்,
பாரத ஸ்டேட் வங்கி தேர்வும் நடக்கிறது. வங்கி தேர்வு முன்பே
அறிவிக்கப்பட்டு, அதற்காக பள்ளி, கல்லூரிகள் தேர்வு மையங்களுக்கு
ஒதுக்கப்பட்டன. இதற்கிடையில் தான், டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு பள்ளி, கல்லூரிகளில் மையங்கள் ஒதுக்கும் பணியில்
ஈடுபட்டபோது, வங்கி தேர்வுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டது தெரிந்து கல்வி
துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரச்னை உள்ளது. வங்கி தேர்வு மையங்கள்,
பெரும்பாலும் நகர் பகுதிகளில் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. டி.இ.டி.,
தேர்வுக்கு, கிராம பகுதி பள்ளி, கல்லூரிகளிலும் மையங்கள்
ஒதுக்கப்படும்.மதுரையில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற
பகுதிகளிலும் மையங்கள் ஒதுக்கப்படும். நகர்களில் மட்டும் மையங்கள்
ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,
என்றார்.
>>>கட்டாய கல்வி உரிமை சட்டம் இன்று முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு
இன்று முதல் செப்.29 வரை பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர்
கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சட்டம், அரசாணைகள், மற்றும்
வழிகாட்டி விதிமுறைகள் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இன்று
துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், நாளை நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், செப். 29 ல் உயர்
துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகளை மாநில அளவில் பயிற்சி பெற்ற
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி
வழங்குகின்றனர். தலைமையாசிரியர்களுக்கு கருத்தாளர்களாக, பயிற்சி பெற்ற
தலைமையாசிரியர்கள், பயிற்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், "காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையில்,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு
பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முழு ஆண்டுத்தேர்வு விடுமுறையில்
விடைத்தாள் திருத்தும் பணிகள் வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் விடுமுறை
தினங்களில் பயிற்சி வழங்க கூடாது,'' என்றனர். தமிழாசிரியர் கழக மாநில துணை
செயலர் இளங்கோவன் கூறுகையில், "ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம், விடுமுறை
தினங்களில் பயிற்சி வழங்க கூடாது. தலைமையாசிரியர்களுக்கு தேர்வு விடுமுறை
கிடையாது. 30 நாள் ஈட்டிய விடுப்பு உள்ளது. விடுமுறை தினங்களில்
பயிற்சிகள் நடத்தும் போது, மாற்று விடுப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
>>>பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச "சிம்கார்டு'
கோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,
மொபைல்போன் "சிம்கார்டு' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின்
தகவல்கள், தலைமை ஆசிரியர்களை சென்றடைவதில், பல்வேறு சிக்கல்கள் தற்போது
உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், பள்ளி கல்வித்துறை
சார்பில், தலைமையாசிரியர்களுக்கு "சி.யு.ஜி' திட்ட வசதி கொண்ட, மொபைல்போன்
"சிம்கார்டு' இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சியில்,
மொத்தம் 240 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அலுவலர்கள் கூறுகையில், "பள்ளி
கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடைய
உதவும். பள்ளி கல்வித்துறை அல்லாத, மற்ற அழைப்புகளுக்கான விதிக்கப்படும்
கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் செலுத்த நேரிடும்.
மொபைல்போன்களை, "சுவிட்ச்- ஆப்' செய்யக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது''
என்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...