தமிழகத்தில் அரசு பள்ளி களில், தொழிற்கல்விஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்படாததால், தொழிற்கல்வி படித்து, வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்தோர், 20 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில்
நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 1967ம்
ஆண்டு, தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தையல் கலை, கைத்தறி நெசவு, ஓவியம், விவசாயம், மரவேலை ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க, தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்திற்கு, கடந்த, 1991ம் ஆண்டில் அரசு தடை விதித்தது. தையல், ஓவியம் ஆகியப் பாடங்களுக்கான தடையுத்தரவு மட்டும், 1998ம் ஆண்டில், திரும்பப் பெறப்பட்டது. அத்துடன் 2001ம் ஆண்டு, ஏராளமான தொழிற்கல்வி ஆசிரியர்கள், ஓய்வு பெற்றனர். காலிப் பணியிடங்கள் அதிகரித்தன.
காத்திருப்பு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொழிற்கல்வி ஆசிரியர் பணி நியமனத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. முதல்வர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவித்தார். ஓராண்டிற்கு பிறகு ஓவியம், தொழிற்கல்வியில் பயிற்சி பெற்றோர், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் சங்கப் பொதுச் செயலர் தங்கராஜ் கூறியதாவது :
20 ஆண்டுகளுக்கு மேல் தொழில்கல்வி படித்துவிட்டு, வேறு வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். அதிகாரிகளிடம் கேட்டால் விவசாயம், தச்சு, நெசவு ஆகியப் பாடங்களுக்கு, இன்னும் தடை நீக்கம் செய்யப்படல்லை என, மழுப்புகின்றனர்.
வேலைவாய்ப்பு
மீண்டும் பள்ளிகளில் கைத்தொழில் ஆசிரியர்களை வகைப் பிரித்து பார்க்காமல், அனைத்து கைத்தொழில் ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கைத்தொழில் பாடம் படித்து, எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருப்போர் எண்ணிக்கை 350க்கும் அதிகம். இவ்வாறு அவர்கூறினார்.