வரும், 20ம் தேதி பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தியா முழுவதும்
பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக
பள்ளிகளில், காலாண்டுத் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, வரும், 20ம் தேதி, 6ம், 7ம், 8ம்
வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு
சமூக அறிவியல் தேர்வும், ப்ளஸ் 2 முதல் குரூப் மாணவர்களுக்கு இயற்பியல்
தேர்வு, மற்ற மாணவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு
செய்முறை தேர்வும் நடக்கிறது.
தமிழகத்தில் முதல்முறையாக காலாண்டுப் பொதுத் தேர்வை மாணவர்கள்
எதிர்கொண்டுள்ள நிலையில், 20ம் தேதி, பொது வேலை நிறுத்தம் நடக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை,
20ம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் இயக்குமா? என்பதும், அன்று நடக்கும்
காலாண்டுத்தேர்வு நடக்குமா என்பதும், கேள்விக்குறியாக உள்ளது.
இன்று அறிவிப்பு: இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர்
தேவராஜனிடம் நேற்றிரவு கேட்டபோது,""20ம் தேதி நிலைமை குறித்தும்,
மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
நாளை (இன்று) காலை முடிவெடுத்து அறிவிக்கப்படும்,'' என்றார்.