கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புது திட்டம் : அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

""ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் சாதனைகளை, வரும் ஆண்டுகளில் வெளிப்படையாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், பாடத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில், 370 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

குற்றச்சாட்டு : ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும், விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால், விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் முறை குறித்து, சர்ச்சை எழுந்து உள்ளது. திறமையான ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகளை, தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியருக்கும் பார்ப்பது கிடையாது என்றும், வேண்டப்பட்ட ஆசிரியராக இருந்தால், எவ்வித விதிமுறைகளையும் பார்க்காமல், கடைசி நேரத்தில் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

வெளிப்படை தன்மை : நடப்பாண்டில், 80 சதவீத ஆசிரியர், முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 20 சதவீத ஆசிரியர், விதிமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு, சிபாரிசுகளின் அடிப்படையில், விருதுகளை கொடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் பெயரில் அமைந்த விருதை, தகுதியான ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும். விருதுக்குரிய ஆசிரியர் செய்த சாதனைகளை, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை, வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

வரும் ஆண்டுகளில்... : ஆசிரியர் விருது பெற்றவர் குறித்த புத்தகத்தில், ஆசிரியர் செய்த சாதனைகள் குறித்து, ஒரு தகவலும் இல்லை; வெறும், பெயர், பள்ளி ஆகிய விவரங்கள் மட்டுமே உள்ளன. இதனால், விருது பெற்ற ஆசிரியரின் சாதனைகளை, அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஆசிரியரின் செயல்பாடுகளை, புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடலாம். விருதுக்கு, விண்ணப்பங்களை வரவேற்பது குறித்த அறிவிப்பையும், ஆசிரியருக்கான தகுதிகள், விதிமுறைகள் குறித்த தகவலையும், முன்கூட்டியே நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்பதும், ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் கருத்துகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, ""தகுதியான ஆசிரியர்களுக்குத் தான், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெறும் ஆசிரியரின் சாதனைகளை, புத்தகத்தில் வெளியிடுவதில், எந்த பிரச்னையும் இல்லை. வரும் ஆண்டுகளில், ஆசிரியர் சாதனைகள், புத்தகங்களில் வெளிப்படையாக வெளியிடப்படும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...