கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காப்பீட்டு திட்ட சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு குழு: தமிழக அரசு ஏற்பாடு

அரசு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்காக, செயல்படுத்தப்படும், புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில், மருத்துவமனைகளை பட்டியலிடுதல் மற்றும் சிகிச்சையின் தன்மையை கண்காணித்தல் ஆகியவற்றிற்கு, அங்கீகாரக் குழு ஒன்றை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நலனிற்காக, புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம், நான்கு லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம். யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வரும், 2016, ஜூன் வரை அமலில் இருக்கும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு குறைந்த பட்ச தகுதி மற்றும் சிகிச்சையின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. உரிய மருத்துவமனைகளை பட்டியலிடவும், சிகிச்சைகளை கண்காணிக்கவும், அங்கீகாரக் குழு அமைக்க வேண்டியதன் அவசியம், சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்குழு, மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அங்கீகாரம் அளிப்பதுடன், அங்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் கண்காணிக்கும். இக்குழுவிற்கு, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கமிஷனர் தலைவராகவும், மருத்துவம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியும், உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள், இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அவற்றை பட்டியலில் சேர்ப்பர்; தொடர்ந்து அவர்கள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பர். இக்குழு, மூன்று மாதங்களுக்கு இப்பணியில் ஈடுபடும் என்று, நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நலநிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு அறுவை சிகிச்சை, சிகிச்சைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...