"பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின்
எதிர்காலத்தை அரசு காக்க வேண்டும்' என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் -
உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் 2,234 அரசு
உயர்நிலைப் பள்ளிகளும், 2,488 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில்
ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 12 லட்சம் மாணவ, மாணவியருக்கு,
உடற்கல்வி இயக்குனர் நிலை-2வைச் சேர்ந்த 89 பேர் மட்டுமே. 15 ஆண்டுகளுக்கு
முன், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை இருந்தது.
தற்போது, பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை உள்ளது. 12 முதல் 16
வயதுடைய, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் பருவம் தான், விளையாட்டுப்
போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம். இப்பருவத்தில் மாணவர்களை
நெறிப்படுத்த, ஆசிரியர்கள் அவசியம் தேவை. இது குறித்து, தமிழ்நாடு
உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்க பொதுச் செயலர் கூறுகையில்,
""நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் தகுதிச் சுற்றுக்கு கூட நம் நாடு
தகுதி பெறாமல் போனதற்கு காரணம், பள்ளிகளில் முறையான விளையாட்டுப்
பயிற்சிகள் இல்லை. அதற்கு காரணம், விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாதது தான்,''
என்றார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O.No.22 - Directors Transfer
பள்ளிக் கல்வித் துறையில் இரண்டு இயக்குநர்களை இடமாற்றம் செய்து அரசாணை (வாலாயம்) எண்: 22, நாள் : 20-01-2026 வெளியீடு G.O.No.22, Dated : 20-0...