கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் பாரிமுனை இடத்திற்கு மாற்றம்

சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம், 15ம் தேதி முதல், பாரிமுனையில் உள்ள புதிய கட்டடத்தில் இயங்க உள்ளது. வணிக வரித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த தேர்வாணையத்திற்கு, பாரிமுனை, பல் மருத்துவக் கல்லூரிக்கு பக்கத்தில், புதிய கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆறு தளங்களுடன், 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில், 20 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதை, கடந்த மாதம், 27ம் தேதி, முதல்வர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் பல்வேறு பிரிவுகள், ஒவ்வொன்றாக, புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அனைத்துப் பிரிவுகளும் மாற்றப்பட்டு விட்டன. எனவே, 15ம் தேதியில் இருந்து, புதிய இடத்தில், தேர்வாணையம் முழுமையாக இயங்க உள்ளது. குரூப்-2 தேர்வுக்கான, பணி நியமன ஒதுக்கீட்டு கலந்தாய்வு, புதிய இடத்தில், முதல் நிகழ்ச்சியாக நடக்கிறது. பாரிமுனை பஸ் நிலையத்திற்கு அருகிலும், கோட்டை ரயில் நிலையத்திற்கு மிக அருகிலும், தேர்வாணைய அலுவலகம் அமைந்துள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் தேர்வர்கள், எளிதில் சென்று வரலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Great Republic Day Sale 2026

  அமேசான் (Amazon) நிறுவனத்தின் Great Republic Day Sale 2026 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப...