தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் விலையில்லாப்பொருட்கள், இலவசக்கட்டாயக்கல்வி நடைமுறை, செயல்வழிக்கல்வி, படைப்பாற்றல் கல்வி, முப்பருவக்கல்வி, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான பணிகள் தொடக்கக்கல்வித்துறையில் இணை மற்றும் துணை இயக்குநர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி
- மதுரை மண்டலத்தில் உள்ள - மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை இணை இயக்குநர்(நிர்வாகம்) அவர்களும்,
- சென்னை மண்டலத்தில் உள்ள - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை இணை இயக்குநர்(உதவி பெறும் பள்ளிகள்) அவர்களும்,
- திருச்சி மண்டலத்தில் உள்ள - திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தருமபுரி மாவட்டங்களை துணை இயக்குநர்(நிர்வாகம்) அவர்களும்,
- கோயம்புத்தூர் மண்டலத்தில் உள்ள - கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை துணை இயக்குநர்(சட்டம்) அவர்களும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.