கடந்த 2011ம் ஆண்டு, தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில்
சேர்ந்த மாணவர்களில், 33% பேர், முதலாமாண்டு தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்
மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும், மொத்தம் 29 மருத்துவக்
கல்லூரிகளைச் சேர்ந்த 3,462 மாணவர்கள் முதலாண்டுத் தேர்வினை எழுதினர்.
ஆனால், அவர்களில் 2,341 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
மருத்துவத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற, ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம்
50% மதிப்பெண்களைப் பெற வேண்டுமென்ற புதிய விதியை மருத்துவப் பல்கலை
அறிமுகப்படுத்தி, அதனடிப்படையில் வெளியான தேர்வு முடிவுகளில் இந்த சரிவு
ஏற்பட்டுள்ளது. அக்டோபர்(இம்மாதம்) 8ம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இத்தேர்வு
முடிவுகளை, பல்கலை நிறுத்தி வைத்திருந்தது. ஏனெனில், புதிய மதிப்பெண்
விதிமுறைகளுக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலின்(MCI) அனுமதியைப் பெற
வேண்டியிருந்தது. அனுமதி கிடைத்ததும், முடிவுகள் தற்போது
வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, ஒரு மருத்துவ மாணவர் தேர்ச்சிப் பெறுவதற்கு,
ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம் 50% aggregate மதிப்பெண்களைப் பெற
வேண்டும் என்ற விதி இருந்தது.
தேர்ச்சி விகிதத்தில் முன்னணி பெற்ற கல்லூரிகள்
ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி - 86.67% தேர்ச்சி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - 85.33% தேர்ச்சி
கோவை மருத்துவக் கல்லூரி - 85.03% தேர்ச்சி
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - 85%
மிகக் குறைவான தேர்ச்சி சதவீகிதம் பெற்ற கல்லூரி
அன்னபூர்னா மருத்துவக் கல்லூரி - 45.94%.