தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகள் என, 300க்கும்
மேற்பட்ட பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி, ரவிராஜ பாண்டியன் தலைமையிலான
குழு, நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் அளித்த
தீர்ப்பிற்கு, தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. கல்வி
கட்டணத்தை நிர்ணயிக்க, நியமிக்கப்பட்ட குழுவிடமே, இதுதொடர்பாக முறையிடலாம்
என, உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளிகள் மற்றும்
சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற
நீதிபதி, கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு,
அனைத்து பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்தது. இதில்,
அதிருப்தி அடைந்த, 6,400 பள்ளிகள், குழுவின் உத்தரவை எதிர்த்து முறையீடு
செய்தன. இதற்கிடையில், நீதிபதி கோவிந்தராஜன், குழுவில் இருந்து விலகினார்.
குழுவின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி, ரவிராஜ பாண்டியன்
நியமிக்கப்பட்டார். அப்பீல் செய்த பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணத்தை
நிர்ணயித்து, கடந்த ஆண்டு ஜூனில், நீதிபதி, ரவி ராஜ பாண்டியன் குழு
உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், 318 தனியார் மற்றும்
சிறுபான்மையினர் பள்ளிகள் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்களை
நீதிபதிகள் பானுமதி, விமலா அடங்கிய, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்'
விசாரித்தது. பின், தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகள் என, 318
பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு,
நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்தது. இந்த பள்ளிகளுக்கு வரும், டிசம்பர்
மாதத்திற்குள், புதிதாக கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும்
உத்தரவிட்டது. அதேநேரத்தில், 2010 -11 மற்றும் 2012-13ம் கல்வி
ஆண்டுகளுக்கு, ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, ஏற்கனவே நிர்ணயித்த
கட்டணத்தை விட, கூடுதலாக, 15 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். இது
ஒரு இடைக்கால ஏற்பாடு என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து,
டி.ஏ.வி., மேல் நிலைப்பள்ளி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
செய்யப்பட்டது. அந்த மனுவில், கூறப்பட்டிருந்ததாவது: சென்னை, ஐகோர்ட்
அளித்த தீர்ப்பு, பள்ளி கட்டணம் தொடர்பான, சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது.
அரசு உதவி பெறாத சுய நிதி பள்ளிகளில், ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள்
அல்லாதவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சம்பளம் தொடர்பாக,
பிறப்பித்துள்ள உத்தரவுகளும் கடுமையாக உள்ளன. அதேநேரத்தில், கல்வி கட்டணம்
தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
பள்ளிகளின் பல்வேறு செலவுகளை, அந்தக் குழு கவனத்தில் கொள்ளவில்லை. ஐகோர்ட்
பிறப்பித்த உத்தரவும், அது தெரிவித்த வழிகாட்டிக் குறிப்புகளும், கல்வி
நிறுவனங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளன. எனவே, சென்னை ஐகோர்ட்
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அதற்கு முன்னதாக, அந்த
உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, டி.ஏ.வி., பள்ளி
மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த,
நீதிபதிகள், சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய சுப்ரீம்
கோர்ட், "பெஞ்ச்' சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க
மறுத்து விட்டது. பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட
குழு தொடர்ந்து செயல்படும். மனுதாரர்கள், தங்களின் பிரச்னைகளை, அந்தக்
குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரத்தில்,
"பள்ளிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த, ஐகோர்ட் கருத்து
மட்டும் இவ்வழக்கில் பரிசீலிக்கப்படும்' என்றும் குறிப்பிட்டனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations
LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...