கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்கும் உத்தரவு ரத்து

"தனியார் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்கும், கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை யாதவா கல்வி நிதி சங்க செயலாளர் நவநீதகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: மதுரை யாதவா கல்லூரி செயலாளராக என்னை நியமித்தனர். அதற்கு, கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் 2009ல், ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து, கோபாலகிருஷ்ணன் மற்றும் சிலர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யாதவா கல்வி நிதி சங்கம் குறித்து, கண்ணன் என்பவர் பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு புகார் அளித்தார். ஐ.ஜி., அறிக்கை கோரினார். என்னை விசாரணைக்கு அழைத்தார். கல்லூரி நிர்வாகத்தில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், அதை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் நிர்வகிக்கலாம், என 1985 செப்.,2 ல் (ஜி.ஓ.,-எம்.எஸ்., 1021) கல்லூரி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுரை கல்லூரிக்கல்வி இணை இயக்குனர், எங்கள் கல்லூரி நிர்வாகத்தை ஏற்பதாக, பிப்.,28 ல் உத்தரவிட்டார். இது தனியார் கல்லூரி ஒழுங்குமுறைச் சட்டப்படி செல்லாது. செயலாளர் இல்லை எனில், கல்லூரி குழுதான் நிர்வகிக்க வேண்டும். கல்வித்துறையின் (1985) உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வினோத் கே.சர்மா முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார். தமிழ்நாடு தனியார் கல்லூரி விதிகள்படி, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அதிகாரம் கல்லூரி செயலாளருக்கு உண்டு. இதை யாராலும் மாற்ற முடியாது. கல்வித்துறையின் (1985) மற்றும் தற்போது கல்லூரி கல்வி இணை இயக்குனரின் உத்தரவு எதேச்சதிகாரமானது. நிர்வாக விதிகளுக்கு புறம்பானது. நிர்வாகத்தில் தகராறு ஏற்படும் பட்சத்தில், மண்டல இணை இயக்குனர் நிர்வாக பொறுப்பை ஏற்கலாம். பிரச்னை முடிவுக்கு வந்தபின், பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கல்லூரி கல்வித்துறையின் (1985) உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...