"டெங்கு'
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்த, பள்ளி மாணவர்களை "மருத்துவ தூதராக' மாநகராட்சி அனுப்பி
வருகிறது.சென்னையில் "டெங்கு' காய்ச்சலால், மருத்துவமனைகளில் சிகிச்சை
பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசு ஒழிப்பு
குறித்து, பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த
மாநகராட்சி ஈடுபட்டுள்ளது."மருத்துவ தூதர்'மண்டல சுகாதார அதிகாரிகளால்,
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
அதில், "என் வீட்டிற்கும் தெருவுக்கும், நான் ஒரு மருத்துவ தூதர்' எனவும்,
மாணவ, மாணவியர் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற
விவரங்களும், குறிப்பிடப்பட்டுள்ளன.தூய்மையான நீரில்...அட்டையின்
மறுபக்கம், ஆட்டுக்கல், தேங்காய்ஓடு, வாழை மரம், டயர், வாளி, குளிர்
சாதனங்கள், திறந்த கிணறு, திறந்த மேல்நிலை தொட்டி, பூந்தொட்டி, அடைபட்ட
மாடிகள், பிளாஸ்டிக் கப் போன்ற படங்கள் அடங்கிய வாசகத்துடன் அட்டை
உள்ளது. மேலும், இந்த பொருட்களில் தேங்கி நிற்கும், தூய்மையான நீரில்
இருந்து, கொசு உற்பத்தியாகி, "டெங்கு' உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது என,
குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மண்டல நல அலுவலர் ஒருவர்
கூறியதாவது:கொசு ஒழிப்பு குறித்து, தங்கள் வீட்டுக்கு மட்டுமில்லாமல்,
தெருவில் உள்ள அனைவருக்கும் மாணவ, மாணவியரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த
உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் SMC பயிற்சி - SPD செயல்முறைகள்
பள்ளி மேலாண்மைக் குழு - தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - SPD செயல்முறைகள் SMC Training to HMs - SPD Proceedings >>> தரவிற...