"தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகள்,
மிக மோசமான, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன" என தேசிய குழந்தை உரிமைகள்
பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா கூறினார். தேசிய குழந்தை உரிமைகள்
பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த,
குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, சென்னையில் நடந்த, இரண்டு நாள் பொது
விசாரணை நேற்று நிறைவடைந்தது. ஆணையத்தின் தலைவர், சாந்தா சின்கா
கூறியதாவது: கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்து,
குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, 67 வழக்குகள் விசாரிக்கப் பட்டன.
இதற்கு, விரைவில் தீர்வு காண, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்
உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகளில், மோசமான நிலையே
நிலவுகிறது. இதை அரசும், ஏற்றுக் கொண்டுள்ளது. மாநிலத்தில், முறைப்படுத்தப்
படாத விடுதிகள் எண்ணிக்கை, அதிகளவில் உள்ளன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட, பல்வேறு துறைகள், ஒருங்கிணைந்து
பணிபுரிவதில்லை. இவர்களுடன், போலீசார் ஒத்துழைப்பும் அவசியம். அப்படி
ஒருங்கிணைந்து பணிபுரிந்தால் மட்டுமே, குழந்தைகள் உரிமைகள்
நிலைநாட்டப்படும்.இரண்டு நாள் பொது விசாரணையில், பல்வேறு விஷயங்கள்,
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேசிய
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க
உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறியதாவது:தமிழகத்தில், கல்வி உரிமை
சட்டம் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. இதை கல்வி துறை சார்ந்தவர்களும்,
ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, பல பரிந்துரைகள் அரசுக்கு
அளிக்கப்படும். குழந்தை திருமணம் குறித்த, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து,
விரிவாக ஆய்வு செய்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு,
அறிக்கை அளிக்க, சிபாரிசு செய்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு
சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு Misuse of power to please a few i...
