கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கலிலியோ கலிலி

 
காலம்காலமாக உலகம் உண்மை என்று நம்பி வந்த பல விஷயங்களை தவறு என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்து உண்மையை உலகுக்கு சொன்னவர் கலிலியோ கலிலி.

1564-ல் இத்தாலியில் பிறந்தவர். முதல் டெலஸ்கோப்புக்கு சொந்தக்காரர். இலேசான பொருட்களை விட கனமான பொருட்கள் வேகமாக கீழே விழும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்று தவறு என நிரூபித்தவர்.இதற்கான சோதனையை பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் மீதிருந்து செய்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.



கீழே விழும் பொருள்களின் வேகவளர்ச்சி விகிதம் குறித்து இவர் உருவாக்கிய சூத்திரங்கள் இன்றைக்கும் நவீன அறிவியலில் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.இவர் கண்டுபிடித்த சடத்துவ விதி(law of inertia) இயற்பியலில் இன்றியமையாத விதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

சந்திரனின் மேற்பரப்பு சமதளமாக இல்லாமல், பள்ளங்களாலும், மலைகளாலும் நிறைந்திருக்கிறது என்று உலகுக்கு சொன்னவர் இவர்.சூரியனையும்,பால்வீதியையும் ஆராய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.

கோப்பர் நிக்கஸின் கோட்பாட்டினை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கும் “ தலையாய இரு உலக மண்டலங்கள் பற்றிய உரையாடல்” எனும் நூல் கத்தோலிக்க சபையின் கோபத்திற்கு உள்ளாக்கியது.

கத்தோலிக்க சபையின் கோபத்திலிருந்து தப்பிக்க,உயிருக்கு பயந்து பூமிதான் சூரியனை சுற்றிவருகிறது என்ற இவரது கூற்றினை மனம் வெதும்பி திரும்ப பெற்றார்.

இருப்பினும் இவருக்கு கத்தோலிக்க சபை தண்டனை விதித்தது, கி.பி.1642-ல் மரணமடையும் வரை வீட்டுச்சிறையில் மனம் வெதும்பி இருந்தபடியே உயிர் வாழ்ந்தார்.

உண்மைகளை எத்தனை காலத்துக்கு மறைத்து வைக்கமுடியும்? ஆயிரம் சங்கிலிகள் கொண்டு பூட்டி பாதாளத்தில் பூட்டி வைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும் அல்லவா?ஆம்,இவர் மறைந்த 1642 ம் ஆண்டு மாபெரும் விஞ்ஞானி நியூட்டன் பிறந்தார், நியூட்டன் விதிகள் பிறந்தன,உலகின் பல சிக்கலான கேள்விகளுக்கு விடைகிடைத்தன.பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.தொழிற்புரட்சி ஏற்பட்டது.மனிதன் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தான்,இனிமேலும் உண்மைகளை மறைக்க இயலுமா?

எந்த கத்தோலிக்க சபை கல்லியோவை வீட்டுச்சிறையில் வைத்ததோ,அந்த கத்தோலிக்க சபையில் தலைவராக இருந்த போப் ஜான்பால் 1992-ம் ஆண்டு கலிலியோவின் கூற்று உண்மை,அதை வாடிகன் ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்தார்.

நேற்று நிலவில் மனிதன் கால் வைத்தான்,இன்று கியூரியாசிட்டி ரோவர் செவ்வாயில் இறங்கிவிட்டது.ஆனாலும் இன்றும் படித்தும் பலர் சாத்திரங்களையும்,மூட நம்பிக்கைகளையும் கட்டிக்கொண்டு அழுவது வேடிக்கையானது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...