கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வீர சிவாஜி கற்ற பாடம்

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார்.

 உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

    தற்போது TNSED Schools  App-ல்  Noonmeal bug fixes and enhancements added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: ...