கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தட்டச்சர் பணிக்கு நாளை கலந்தாய்வு

தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நாளை நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பணிகளுக்கான குரூப் - 4 தேர்வு முடிவு, அக்., 8 ல் வெளியிடப்பட்டது.
இதில், தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, நாளை காலை, 8:30 மணி முதல், பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. தட்டச்சர் பணிக்கு தேர்வானவர்கள், அரசு தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர் விவரம், ஒவ்வொரு துறையிலும் உள்ள இனவாரியான காலிப்பணியிடம், சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் பட்டியல் ஆகியவை, தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும், 17ம் தேதி முதல் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-04-2025

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-04-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் இயல் :குடியியல் அத...