ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து திண்டுக்கல், காசம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கிராம மக்கள் பூட்டினர்.
இப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 450 மாணவர்கள்,ஆறு
ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது, 150 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள்
மட்டுமே உள்ளனர். இவர்களில் தலைமை ஆசிரியை அமுதாதேவி மருத்துவ விடுப்பில்
உள்ளார். 4 மாதமாக, ஒரு ஆசிரியை மட்டும் பணிக்கு வருவதால், கற்பித்தல் பணி
முடங்கியது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் நேற்று பள்ளியை பூட்டினர்.
இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள்
கூறுகையில், "இப்பள்ளிக்கு அயல் பணியாக 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
பள்ளி இன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.