கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இலவச லேப்டாப் வினியோகத்தில் பாரபட்சம்

கல்வித்துறை வளர்ச்சிக்கு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், லேப்டாப் வழங்குவதில் மட்டும், பாரபட்சத்தோடு நடந்துகொள்வது ஏற்புடைதல்ல என, பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் நலனுக்காக சுயநிதி வகுப்புகள் செயல்படுகின்றன. அரசு ஒப்புதலின் பேரில் துவங்கப்படும் இப்பிரிவுகளுக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும். இப்பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல், மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் கிராம கல்விக்குழு உதவியுடன் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்கவேண்டும்.

கடந்த கல்வியாண்டில் (2011-12) 9.16 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என, கல்வித்துறை பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்காக 319 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகள் மிகுந்த தாமதத்திற்கு பிறகு, நடப்பு கல்வியாண்டில் லேப்டாப் வினியோகிக்கப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகளை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் சேகரிக்கப்பட்டு பள்ளி கல்வி இயக்குநரகத்திற்கு கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அரசு பள்ளி சுயநிதி பிரிவு மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 65 அரசு பள்ளிகளுக்கு 9,363, அரசு உதவி பெறும் 30 பள்ளிகளில் 5,810 , நலப்பள்ளி ஒன்றுக்கு 40, 4 நகரமைய பள்ளிகளுக்கு 1,117 , 16 மாநகராட்சி பள்ளிகளுக்கு 2,587 என மொத்தம், 18,917 மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். கடந்த ஆண்டு ஒரு சில மாவட்டங்களில் சுயநிதி பிரிவு பள்ளி மாணவர்கள் பெயர் சேர்க்கப்பட்டும் , ஒரு சில மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களுக்கு அரசின் பிற நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலையில், லேப்டாப் மட்டும் மறுக்கப்படுவது கேள்விக்குரியது.

இதுகுறித்து, கோவை மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், "நடப்பாண்டில் லேப்டாப் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை பட்டியலில், சுயநிதி பரிவு மாணவர்களின் பெயர்கள் சேர்க்கவேண்டாம் என, பள்ளி கல்வித்துறை தெரிவித்ததால் நாங்கள் சேர்க்கவில்லை. இம்மாணவர்களும் பின்தங்கிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்கும் கிடைத்தால் பயனடைவார்கள், ' என்றனர்.

இதுகுறித்து அரசு பள்ளி மாணவர்கள் பாரதி, லதா மற்றும் சரவணன் கூறுகையில்
, "" கடந்த ஆண்டு எங்கள் பிரிவில், படித்த சீனியர் மாணவர்களுக்கு லேப்டாப் கிடைத்தது. ஆனால் எங்களின் பெயர்கள் தற்போது பட்டியலில் இடம் பெறவில்லை. நாங்களும் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் தான் எங்களை மட்டும் ஒதுக்குவது ஏன் என்று புரியவில்லை'' என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...