கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க அலுவலர்களுக்கு ஆட்சித் தமிழ் பயிற்சி

அரசின், சார்பு அலுவலகங்களில், ஆட்சி மொழித் திட்டத்தை முழுமையாக, செயல்படுத்தும் வகையில், அலுவலர்கள், பணியாளர்களுக்கு, பயிற்சி கொடுக்க, தமிழ் வளர்ச்சித் துறை முடிவு செய்துள்ளது. அரசு அலுவலகங்களில், முழுமையாக, தமிழ்வழியில் பதிவேடுகள் பராமரிப்பு, சுற்றறிக்கை உள்ளிட்டவை, இருக்கவேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்,70 சதவீதத்திற்கு மேல், ஆங்கில கலப்பு இன்றி, தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது. இதை, 100 சதவீதமாக்க, தமிழ் வளர்ச்சித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அரசு சார்பு நிறுவனங்களான, மின்வாரியம், போக்குவரத்து கழகம், தன்னாட்சி அமைப்புகளான, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களிலும், முழுமையாக, ஆட்சிமொழித்திட்டத்தை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு சார்பு நிறுவனங்களில், பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மின்வாரியத்தில், 70 சதவீதத்திற்கு மேல், தொழில்நுட்ப வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, "வயர்மேன்' என்பதை, கம்பியாளர் என்றும், "பியூஸ்' என்பதை, "எரிஇலை' என்றும், "பீடர்' என்பதை, "மின்ஊட்டி' என்றும், பதிவேடுகளில் பயன்படுத்த, பயிற்சியில் அறிவுறுத்தப்படவுள்ளது. முழுமையாக, தமிழ்படுத்த முடியாத தொழில் நுட்ப வார்த்தைகளை ஆங்கில உச்சரிப்பில், தமிழில் எழுத கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை தொடர்ந்து, அலுவலக பராமரிப்பு நடைமுறை முழுமையும், தமிழ்படுத்தப்படவுள்ளது. இதை, நடைமுறைப்படுத்துகின்றனரா என, அந்தந்த மாவட்டத்திலுள்ள, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மூலம், அடிக்கடி ஆய்வு நடத்தப்பட வுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக முதற்கட்ட பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...