கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அங்கன்வாடிகளுக்கு விளையாட்டு பொருள்: ரூ.3.59 கோடி ஒதுக்கீடு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அங்கன்வாடி மையங்களுக்கு, 3.59 கோடி ரூபாய் செலவில், பாடம் சம்பந்தப்பட்ட விளையாட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழி கற்றல் முறையும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறையும் அமல்படுத்தப்படுகிறது.
செயல்வழிக்கற்றல் முறையில், மாணவர்கள் தாமாகவே கற்றுக்கொள்ளும் வகையில், கல்விமுறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இதில் மழலையருக்கான முன்பருவ கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில், அங்கன்வாடி மையங்களிலும் செயல்வழிக்கற்றல் கல்வி முறையில் விளையாட்டு உபகரணங்களை கொண்டு, கற்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், 160 அங்கன்வாடி மையம் வீதம், தமிழகம் முழுவதும், 4,800 அங்கன்வாடி மையங்களுக்கு, தலா, 7,485 ரூபாய் வீதம், 3.59 கோடி ரூபாய்க்கு, விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
தமிழக அரசு நிறுவனமான, டான்சி மூலம் இந்த விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யப்பட்டு, அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு, எண்கள் அறிமுகம், எழுத்துகள் அறிமுகம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்கும் வகையில், இந்த விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...