கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பல்கலை கழகங்களில் நவீன கல்வி கூடங்கள்

தமிழகத்தின், 10 பல்கலைக் கழகங்களில், நவீன கல்வி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக அரசு, 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, பெரியார், திருவள்ளுவர், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், அரசு, நவீன கல்வி கூடங்களை அமைக்க உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கும், 20 லட்ச ரூபாய் என, மொத்தம், 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திரை, திரையிடும் கருவி, கணினி உள்ளிட்டவற்றுடன் இணைத்து, நவீன கல்வி கூடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இணையதளமும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
"பவர் பாயின்ட், அனிமேஷன்' முறையில் கற்றுத் தரும் வகையில், பாடங்கள் உருவாக்கப்படுகின்றன. திரையில் பாடங்கள் குறித்த தகவல்களை, எழுதுகோல் மூலமாக எழுத லாம். இவை கணினியில் பதிவாகின்றன. மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றால், "சிடி, பென் டிரைவ்' ஆகியவற்றில் பதிந்து, கற்றுக் கொள்ளலாம்.
சென்னை பல்கலைக் கழக பாடத் திட்டக் குழு தலைவர், ரவீந்திரன் கூறியதாவது:
ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. படங்களை இணைத்து, "பவர் பாயின்ட், அனிமேஷன்' மூலம் வகுப்புகள் எடுக்கும் போது, கவனம் சிதறாது. மொழி பிரச்னையில் சிக்கும் மாணவர்களும், படங்கள் வாயிலாக, பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இம்முறையில் கல்வி கற்பிப்பதால், நேரம் சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு, ரவீந்திரன் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...