கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர்கள் மனசாட்சிடன் பணியாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்

"ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது,'' என, ஆய்வுக்கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா கூறினார். நாமக்கல் மாவட்டத்தில், துவக்க, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த ஆய்வுக் கூட்டம், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா தலைமை வகித்து, மாணவர்களின் தரம் குறித்து கேட்டறிந்தர். ஆய்வுக் கூட்டத்தில், 150 பள்ளிகள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில் தொகுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் நடந்த, இந்த ஆய்வு கூட்டத்தில், அனைத்து, ஏ.இ.இ.ஓ.,க்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஐந்தாம் வகுப்பு படித்து ஆறாம் வகுப்புக்கும், எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும் மாணவ, மாணவியர், தமிழ், ஆங்கிலத்தை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். கணக்கு பாடத்தின் அடிப்படைகளை புரிந்து வைத்திருக்க வேணடும். அதை குறைத்து, கல்வி அறிவில், நாமக்கல் மாவட்டம் முன்னேற்றம் அடைய அனைத்து தலைமையாசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்கள், ஆசிரியர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்டுள்ள பள்ளிகளில், அம்மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாசிப்புத்திறன் மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது.

கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியதாவது: மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் அடைவு திறன் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது, ஏ.இ.இ.ஓ.,க்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. குறிப்பாக, கொல்லிமலை, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், கபிலர்மலை, நாமகிரிப்பேட்டை போன்ற ஒன்றியத்தில் மாணவர்கள் தரம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஏற்படும் பிரச்னையை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் திலகம், தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...