கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.10.2020 (செவ்வாய்)...

🌹சூழ்நிலைகள் மாறும்  போது பலரது வார்த்தைகள் மாறும். சிலரது வாழ்க்கையும் மாறும்.!

🌹🌹முடியாதவன் தான் அடுத்தவனை பற்றி விமர்சிப்பான். முடியும் என நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🏵🏵 மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற வழக்கில், இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

🏵🏵அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்க திட்டம் - விரைவில் அரசாணை வெளியீடு

🏵🏵ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 750 பேர் தேர்ச்சி: மெயின் தேர்வு ஜனவரி 8ம் தேதி தொடக்கம்

🏵🏵பள்ளி வேலை நாட்களில் பாதி விடுமுறையில் தீர்ந்து போனது பள்ளி திறப்பு இப்போது இல்லை ,நேரடியாக முழு ஆண்டு தேர்வு தான் உயர் அதிகாரிகள் கருத்து.          மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்காமல் கல்வி தொலைக்காட்சி நடத்தப்படும் பாடங்களை மட்டுமே படிக்கலாம் கல்வி டிவியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் ,அதிக மதிப்பெண் பெறலாம் பள்ளிக்கல்வித் துறை மூத்த அதிகாரி

🏵🏵திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல்தான் செய்யும். காலம் கடத்தி 7.5% இடஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்

திருமணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

🏵🏵நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பா.ஜ.க., தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது

முதல் மந்திரி உத்தவ் தாக்கரே

👉முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்: 

பாரதிய ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

🏵🏵பிரதமர் மோடி மீது பஞ்சாப் மக்கள் கடும் கோபத்தில் உள்ளது துரதிருஷ்டவசமானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து பஞ்சாப் மக்கள் நவராத்திரி கொண்டாடியது குறித்து ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார். பிரதமர் மீதான கோபம் ஆபத்தான முன்னுதாரணம்; இது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளை அணுகி பிரதமர் மோடி தீர்வுகாண ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

🏵🏵அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு தர முன்னாள் நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைந்திருந்தது,

நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைக்கு மாறாக 7.5% ஆக தமிழக அரசு ஏன் குறைத்தது?

திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி

🏵🏵கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி; இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும்

கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்

🏵🏵நான் முதலமைச்சரானால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவேன்

தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..?

திருமாவளவன்

🏵🏵ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் இதுவரை 18 லட்சம் பேர் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்த பிறகு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் பேட்டியளித்துள்ளார்.

🏵🏵RTE 25% - மாணவர்கள் சேர்க்கை - Completion certificate சார்ந்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.  

🏵🏵கல்லாதோர், 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: 2021 பிப்., க்குள் கற்பிக்க அரசு திட்டம். 

எழுத, படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில், 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' என்ற திட்டத்தை செயல்படுத்த மாநில பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது 

🏵🏵குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு போகும் மாணவர்கள் அரசு பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும் அபாயம் - நாளிதழ் செய்தி 

🏵🏵அம்பேத்கர் சட்டப் பல்கலையில், மூன்றாண்டு படிப்புக்கான விண்ணப்ப பதிவுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி நவம்பர், 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

🏵🏵போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம், அனைத்து அரசு பள்ளிகளிலும் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பெற்றோர் முன்வைக்கின்றனர். 

🏵🏵தில்லியில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்துள்ளார்.

🏵🏵‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பும், பின்பும் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு சரிவு: மருத்துவ கல்வி இயக்குனரக தகவலில் அதிர்ச்சி

🏵🏵ராஜராஜ_சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு

தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது 

மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது

🏵🏵சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. எனவே போட்டியிட மாட்டேன்.

-பாஜக தலைவர் முருகன்

🏵🏵தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் அக்டோபர் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது 

- வானிலை ஆய்வு மையம்

🏵🏵சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு

🏵🏵அமெரிக்கா : முன்கூட்டியே நடந்த வாக்குப்பதிவில், கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு அதிக வாக்குகள் பதிவு என ஆய்வில் தகவல்

🏵🏵இந்தியாவில் முதல்முறையாக நீதிமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பு

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் நிகழ்வுகளை நேரலையாக காணலாம்.

🏵🏵விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர், விஜய் சேதுபதியிடமும், தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்

🏵🏵இன்றைய காலத்தில் மனுதர்மம் என்பது கிடையாது; அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் மட்டுமே நாட்டில் உள்ளது; தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.

🏵🏵பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரம் நேற்றுடன் நிறைவு.

🏵🏵கார்கில் போரால் பாகிஸ்தானுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

🏵🏵இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்கள் பதிவிடுவதை தடை செய்ய வேண்டும்- ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் கடிதம்.                               

🏵🏵உத்தரகாண்ட் மாநிலத்தில் நவ.2 முதல் பள்ளிகள் திறப்பு; 10, 12-ம் வகுப்புகள் மட்டும் இயங்கும்: அரசு முடிவு                                           

🏵🏵மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட 40% பாடங்கள் எவை?- குழப்பத்தை தவிர்க்க உடனே அரசு அறிவிக்க வேண்டும்: ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

🏵🏵மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப்பில் நீட் தேர்வுக்கான பாடங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

🏵🏵நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு  சீர்குலைத்து நிர்மூலமாக்கி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

🏵🏵மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு பாஜக அரசே முழு பொறுப்பு

இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தமிழகத்தின் ஒருமித்த நிலைபாட்டை மத்திய அரசுக்கு உணர்த்த உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் 

திருமாவளவன்

🏵🏵வெறுப்பு அரசியல் எல்லை மீறிவிட்ட நிலையில், இந்த இழிந்த அரசியல் களத்தை விட்டே முற்றாக விலகிவிடுவதுதான் நல்லது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது

தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம்

🏵🏵மருத்துவப்படிப்பில் 50% ஓபிசி இடஒதுக்கீட்டை பெற பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி அழுத்தம் தரவேண்டும். 

இந்தாண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என முதல்வர் அறிவிக்க வேண்டும்

உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய அவசரத்தை ஓபிசி பிரிவினருக்கும் காட்ட வேண்டும்.

ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

🏵🏵தமிழகத்தில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

🏵🏵திருமாவளவன் மீது பொய் புகார் அளித்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

🏵🏵மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும். 

இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

வைகோ.

🏵🏵கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கவில்லை" 

திமுக பொது செயலாளர் துரைமுருகன்

🏵🏵7.5% இடஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்; இது ஒரு வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

🏵🏵தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு: தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கோரிக்கை

🏵🏵வரலாற்றிலேயே முதல் முறை: மெய்நிகர் முறையில் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵


🌹👉கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த கல்விக் குழு உட்பட 5 குழுக்கள் அமைப்பு -    


🌹👉தமிழக அரசு அறிவிப்பு..

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் முடிவுற்று , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பதவியேற்றுள்ளன . மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுள் மிக முக்கியமான அமைப்பான ஊரகப் பகுதி மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் அதிக அளவிலான பணிகளைக் கொண்டுள்ளதன் காரணமாக , அப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் , அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் , கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் கீழ்காணும் 

👇👇👇👇👇👇👇👇👇👇

5 குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து பார்வையில் காணும் அரசாணையில் தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

👉கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த தமிழக அரசு அறிவித்த 5 குழுக்கள் :

👇👇👇👇👇👇👇👇👇👇

👉1. நியமனக்குழு

👉2.வளர்ச்சி குழு

👉3.வேளாண்மை

👉4. நீர்வள மேலாண்மை குழு

👉5. பணிகள் குழு


🌹கல்விக் குழு🌹

👇👇👇👇👇👇👇👇👇👇

👉ஒவ்வொரு ஊராட்சியிலும் கல்விக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.

👉இக்குழுவின் தலைவராக கீழ்க்காணும் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவரை கிராம ஊராட்சி மன்றம் தேர்வு செய்ய வேண்டும். 


🌹உறுப்பினர்கள்🌹

👇👇👇👇👇👇👇👇👇👇

👉1. பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி 

👉2. சுய உதவிக் குழு பிரதிநிதி 

👉3. அரசு சாரா அமைப்பைச் சார்ந்த பிரதிநிதி 

👉4. உள்ளூர் தொடக்க அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை 

👉5.சத்துணவு அமைப்பாளர்


🌹முக்கியமான பணிகள்🌹

👇👇👇👇👇👇👇👇👇👇

👉 ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடைய செய்தல்.

👉அனைவருக்கும் கல்வி , முறை சாரா கல்வி, நூலக மேம்பாடு , எழுத்தறிவு மற்றும் கிராமப்புற மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்கான உத்திகளை வகுத்தல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...