கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாள் அன்று CL / EL விடுப்பு எடுக்கலாமா?



 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 4 அன்று விடுப்பு எடுக்கலாமா? 


நண்பர்களே வணக்கம் 🙏🏻


வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான் 😁


ஜூன் 4 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?


வழங்கக்கூடாது. 


இதற்கான  விளக்கத்தை  உதாரணத்துடன் பார்ப்போம்.


அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் 02-01-2024 அன்று விடுப்பு வழங்கலாமா


2/1/24 அன்று CL வழங்க இயலாது.....


ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...


Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் 🤔


CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...


CL ( விடுப்பு+விடுமுறை ) 10 நாள்கள் வரை allowed..... 

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும் 


( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...


இந்த முறை 23/12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....


2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1  விடுப்பு  நாள் , என 11 நாள்கள் ஆகிறது....


(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் 11 நாள்கள் ) எனவே இது CL விதிகளின் படி விடுப்பு எடுக்க இயலாது.


எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( 12 CL கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க இயலாது.


ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...


சரி....

 2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு விடுப்பு தேவை... என்ன செய்யலாம்?


CL தான் வழங்க இயலாது.


ஈட்டிய விடுப்பு EL எடுக்கலாம்


அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...


2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

( ஒரு நாள் மட்டுமே EL) 


(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 


22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...


இந்த பதிவின் நோக்கம்...


1) கோடை விடுமுறை எப்பொழுதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

 ஏப்ரல் கடைசி வேலை நாள்...


அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 

எப்பொழுதும் CL எடுக்க இயலாது


2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும் ....


அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் விடுமுறை எனில் CL எடுக்கலாம்...


 * விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது...


01-06-2026ல் சிறப்புநிலை பெறுபவர்களுக்கான தகவல்கள்



 01-06-2026ல் சிறப்புநிலை (Special Grade) பெறுபவர்களுக்கான தகவல்கள்


நண்பர்களே வணக்கம் 🙏


💐💐💐


2003-04, 2004-05, 2005-06 தொகுப்பூதிய நியமனம்.

 01/06/2006 பணி வரன் முறை ஆசிரியர்களுக்கு


இன்றுடன் இருபது ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்கிறீர்கள்


நாளை 01/06/2026 இல் 

(அதே பதவியில்  இருப்பவர்களுக்கு SPL grade) *சிறப்பு நிலை* வருகிறது...



 * கருத்துருக்கள்

1) படிவம்

2) பதிவுத் தாள் ( record sheet)

3) பணிக் கால கணக்கீட்டு தாள்

4) பணிக் கால சரிபார்ப்பு விவரங்கள்

5) விடுப்பு விவரங்கள்

6) போராட்டத்தில் பங்கேற்பு/முறைப்படுத்தப் பட்ட விவரங்கள்

7) Special Report (சில மாவட்டங்களில் கேட்கப் படுகிறது)

8) ஒருங்கிணைந்த சான்று

9) சார்ந்த ஆசிரியர் விண்ணப்பம் 🙏


மேலே உள்ள கருத்துருக்கள் உடன் இணைக்கப்பட வேண்டியவை


1) SR Page 1&2

2) நியமன ஆணை

3) நியமனம் ஆணை SR Entry page

4) பணி வரன் முறை ஆணை

5) பணி வரன் முறை SR Entry page

6) தகுதி காண் பருவம் ஆணை

7) தகுதி காண் பருவம் SR Entry page

8) தேர்வு நிலை ஆணை

9) தேர்வு நிலை ஆணை SR Entry page

10) SSLC Mark sheet

11) SSLC Genuineness

12) SR Entry page

13) HSC Mark sheet

14) HSC Genuineness

15) SR Entry page

16) UG convocation

17) UG Genuineness

18) SR Entry page

19) PG convocation

20) PG Genuineness

21) SR Entry page

22) B.Ed convocation

23) B.Ed Genuineness

24) SR Entry page 

( SSLC to B.Ed Genuineness SR இல் ஒரு பக்கத்தில் பதிவு செய்து இருந்தால் ஒரு முறை வைத்தால் போதும்...) 


இவை அனைவருக்கும் பொதுவானது


இது தவிர சிலருக்கு


25) SSLC/HSC இல் தமிழ் படிக்காதவர்கள், TNPSC second class Lang test pass details/ SR Entry page


26) other state Degree எனில் Evaluation ( மதிப்பீடு) by DEO ஆணை / அதன் SR Entry page 


அரசாணை 151 பகது நாள் 9/9/22 படி

உயர் நிலை/ மேல் நிலைப் பள்ளியில் PET/SGT/BT/PG க்கு தேர்வு நிலை/ *சிறப்பு நிலை* வழங்கும் *அதிகாரம்* 

சார்ந்த *மாவட்ட கல்வி அலுவலர் (இ.நி) அவர்களுக்கு* தான் உள்ளது...


 * பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக சமர்ப்பிக்க வேண்டியது


1) HM covering letter 

 2) அசல் பணிப் பதிவேடு

3) ஆசிரியர் விண்ணப்பம்

4) கருத்துருக்கள் ( ஒன்று மட்டும் போதும்)

5) இணைப்புகள் 


வழக்கமான நடைமுறை தான்...

 *1/6/2026* இல் அதிக அளவில் ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற உள்ளதால்

மதிப்பிற்குரிய பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி கல்வி மாவட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது ...



தங்களின் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பதிவு 😊


இத்துடன் Excel sheet (All forms in one) இணைத்துள்ளேன்

குறைந்த உள்ளீடு செய்து தங்களது கருத்துருக்களை தயாரித்து கொள்ளலாம்...


தட்டச்சு படிவம் தான் வேண்டும் என்று கிடையாது...

Empty form இல் கையால் எழுதி கூட தயாரிக்கலாம் 🙏


 *சிறப்பு நிலை* பெற்று 

விரைவில் வரும் கல்வியாண்டில் *பதவி உயர்வு* பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

31/5/26


ஆசிரியர்கள் பயிற்சி பெறும் நாட்கள், விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்பதற்கான அரசாணை



 விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டால் அந்நாட்களுக்கு ஆசிரியர்கள் ஈடு செய்யும் விடுப்பினை எடுத்துக் கொள்ளலாம்   என்பதற்கான அரசாணை (நிலை) எண். 62 , நாள் : 13.03.2015 


Government Order stating that if the days on which teachers are undergoing training fall on holidays, they may be allowed compensatory leave of not more than 10 days


G.O. Ms. No. 62, Dated : 13-03-2015 - விடுமுறை நாட்களில் பயிற்சி வந்தால், பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், ஈடு செய்யும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




சுருக்கம்


பள்ளிக் கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல்/ஈடுசெய்யும் விடுப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக் கல்வித் (அகஇ) துறை


அரசாணை நிலை எண். 62 , நாள் : 13.03.2015 


திருவள்ளுவர் ஆண்டு 2046

மாசி 28


படிக்கப்பட்டவை:-


1. அரசாணை நிலை எண்.29, பள்ளிக் கல்வி, நாள் 12.2.2008


2. அரசாணை நிலை எண்.89, பள்ளிக் கல்வி, நாள் 21.4.2008


3. அரசாணை நிலை எண்.128, பள்ளிக் கல்வி, நாள் 7.5.2010


4. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண். 33094/ இ1/ 2014, நாள் 5.12.2014.


ஆணை:


மேலே ஒன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் (Cluster Resource Centres (CRC)) செயல்வழிக் கற்றல் பயிற்சி (Activity Based Learning (ABL)) பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 1-5 வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் படைப்பாற்றல் கல்வி பயிற்சி (Active Learning Method (ALM)) பெறும் 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு அவர்கள் ஒரு ஆண்டில் பயிற்சி பெறும் 10 நாட்களையும் 10 பணி நாட்களாகக் கருதலாம் என்றும், அந்த 10 நாட்களை பள்ளி செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாட்களுக்குள் அடங்கும் வகையில் அனுமதிக்கலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.


2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மேற்காண் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் வகையில் மேற்காணும் அரசாணைக்கு திருத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.


3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மேற்காண் பயிற்சி பெறும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 1-8 வகுப்பு ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒரு ஆண்டில் பயிற்சி பெறும் 10 நாட்களை பணிநாட்களாக கருதலாம் என்றும், அந்த 10 நாட்கள் பள்ளி செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாட்களுக்குள் அடங்கும் எனவும், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7,8 வகுப்பு ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒரு ஆண்டில் படைப்பாற்றல் கல்வி பயிற்சி பெறும் 10 நாட்களை ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என திருத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.


4, மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் தொகுப்பு கலந்தாய்வு மையங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பயிற்சி நடைபெறுவதால், அப்பயிற்சியில் கலந்து கொள்ளும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டியுள்ளதால் பள்ளி விடுமுறை நாட்களில் நடைபெறும் பயிற்சிகளில் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு அனுமதிக்க உரிய ஆணை வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டார்.


5 தொடக்கக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து ஏற்று, அரசாணை (நிலை) எண்.29, பள்ளிக் கல்வி, நாள் 12.2.2008க்கு கீழ்வருமாறு திருத்தம் வெளியிடுகிறது.


திருத்தம்


அரசாணை (நிலை) எண்.29, பள்ளிக் கல்வி, நாள் 12.2.2008ன் பத்தி 3-க்கு கீழ்க்கண்டவாறு மாற்றீடு செய்யப்படுகிறது:


3. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல் பணி நாட்களில் வழங்க கருத வேண்டும். மேலும் அவ்வாறு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம். விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.


(ஆளுநரின் ஆணைப்படி)


த.சபிதா

அரசு முதன்மைச் செயலாளர்


பெறுநர்

தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை -6.

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6.

மாநில திட்ட இயக்குநர்,

அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை-6.


// ஆணைப்படி அனுப்பப்படுகிறது//


பிரிவு அலுவலர்


Temporary Teachers Appointment - G.O.s & Proceedings

 


தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணைகள் மற்றும் இயக்குநர்களின் செயல்முறைகள் தொகுப்பு


A compilation of Government Orders and Directors' Proceedings regarding the appointment of Temporary Teachers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாள் அன்று CL / EL விடுப்பு எடுக்கலாமா?

 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 4 அன்று விடுப்பு எடுக்கலாமா?  நண்பர்களே வணக்கம் 🙏🏻 வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில...