கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு...

 ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான அட்டவணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 -ம் தேதிமுதல் ஆந்திராவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இப்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, வரும் நவம்பர் மாதம் 2-ம்தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் (பிளஸ் 1, 2) திறக்கப்படும் என ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்நிலையில், நேற்று இதற்கான அட்டவணையை மாநில முதன்மைச் செயலாளர் நீலம் சாஹ்னி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 2-ம் தேதி 9, 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதே தேதியில் இண்டர்மீடியட் ஜூனியர் கல்லூரிகளும் (முதலாம் ஆண்டு) திறக்கப்படவுள்ளன. 12-ம் தேதி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

23-ம் தேதி முதல் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கும், டிசம்பர் 14-ம் தேதி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இதே அட்டவணை பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளி மாணவியான கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் விளையாடிய Super Raid

  அரசுப்பள்ளி மாணவியான கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் விளையாடிய Super Raid சென்னை கண்ணகி நகரைச் ...