கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 11ல் முதல்வர் அறிவிப்பு...

 ஈரோடு மாவட்டம், பவானியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: 

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதி தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற அனைவரும், வாழ்நாள் முழுதும் ஆசிரியர் பணி பெற தகுதி உடையவர்களாக, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கும்பகோணம் பள்ளி தீ விபத்து பிரச்னைக்கு பின், கட்டட உறுதி சான்றிதழ் பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

முன்னர், பள்ளிக்கான அங்கீகார சான்று ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கட்டட உறுதிசான்று பெற்ற பள்ளிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதன்படி தமிழகத்தில், 2,690 பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக நடத்தப்படும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப் பட்டு உள்ளன. ஏதாவது பள்ளியில், அப்பொருட்கள் வழங்காமல் விடுபட்டிருந்தால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும், 9ல் பெற்றோர்களுடன் அந்தந்த பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்படும்.

11ல் அறிவிப்பு

அதன்பின், முதல்வரிடம் வழங்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் வரும், 11ல், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...