கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு - கருத்து கேட்பு கூட்டம் - பெற்றோருக்கு மட்டுமே அனுமதி... (நாளிதழ் செய்தி)

 பள்ளிகளை திறந்தால், கொரோனா தொற்று அதிகமாகும் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, வரும், 9ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன் விபரம்: பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பில், பெற்றோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்கலாம்.

பெற்றோர் - ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள்பங்கேற்கக் கூடாது. பெற்றோர் என்ற பெயரில், அரசியல் கட்சியினர், கருத்து கேட்பு கூட்டத்தில்பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது. எவ்விதமான சமூக அமைப்புகள், அரசியல் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு

  கல்லூரிக் கனவு கையேடு  Kalloori Kanavu Guide - College Dream Guide >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...