கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.11.2020 (ஞாயிறு)...

 

🌹உதிக்கும்போதும் மறையும்போதும் ரசிக்கும் உலகம்.

உச்சிக்கு வந்தால் திட்டி தீர்க்கும்.

சூரியனை மட்டுமல்ல மனிதனின் வளர்ச்சியையும் கூட.!

🌹🌹சண்டை போட்டு பேசாமல் இருக்கும் காலம் போய் 

பேசினால் சண்டை வரும் என்று பயந்து பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை நாளை திங்கட்கிழமை அன்று முதல்வரிடம் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

👉40 லிருந்து, 50 சதவீதமாக பாடத்திட்டங்களை குறைக்க -பள்ளிக் கல்வித்துறை முடிவு

🍒🍒நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

🍒🍒வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் - மத்திய அரசு.

🍒🍒முதுநிலை 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்.

🍒🍒டிசம்பர் மாத ரேஷன் பொருட்களைப் பெற இன்று டோக்கன் விநியோகம் தொடங்குகிறது.

🍒🍒அரசின் நடவடிக்கையை பாராட்ட மனமில்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின் தினம் ஒரு அறிக்கையை வெளியிடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

🍒🍒தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

🍒🍒இஸ்ரோ -ரஷ்யா அனுப்பிய இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணில் மோதுவதைப் போல மிகவும் அருகருகே வந்ததால் விஞ்ஞானிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

🍒🍒அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டின் செயற்கைக் கோளையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 14Ts033 நுடோல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை புவி வட்டப் பாதையின் குறைந்த உயரத்தில் சுற்றித் திரியும் எந்த செயற்கைக் கோளையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

🍒🍒அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

🍒🍒கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் பயன்படுத்துவதையும் சமூக இடைவெளி பின்பற்றுவதையும் கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

🍒🍒 பள்ளிகள் திறந்தபின் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த சுவரொட்டி வெளியீடு

🍒🍒தமிழ் வழியில் பொறியியல் கல்வி: மத்திய அரசின் முயற்சிக்குத் தமிழக அரசு துணை நிற்கும்- அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

🍒🍒தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர TNPSC-க்கு நீதிமன்றம் உத்தரவு.

🍒🍒பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் , இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன .

👉தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை அரசு வழங்குகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,டிச., 4 வரை பதிவு செய்யலாம்.

👉அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள், விருப்பமுள்ள மாணவர்களின் விபரங்களை, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் வழியாகவும், கூடுதல் விபரங்களை மாணவர்களிடம் பெற்றும், பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் முடிந்த அறிக்கையை, தலைமையாசிரியர்கள், மாவட்ட உதவி இயக்குனர் அலுவலர்களிடம், டிச., 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

🍒🍒அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6-வது இடத்தை பிடித்துள்ளது

🍒🍒சிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

🍒🍒நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

🍒🍒கொரோன தொற்று இல்லை என மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மழைக்காலம் மிகவும் சவாலானது; கவனமாக இருக்க வேண்டும் என சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

🍒🍒 தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளராக கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🍒🍒நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நாளை திங்கட்கிழமை தமிழகம் வருகின்றனர்

மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் அசுதோஸ் அக்னிகோத்ரி தலைமையில் குழு அமைப்பு

7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் தமிழகம் வந்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்

🍒🍒சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16 முதல் நேற்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு: இனி பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு.

🍒🍒போராடிப் பெற்ற சமூகநீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

🍒🍒வரலாற்றில் முதல் துறையாக உச்ச நீதிமன்றத்துக்கு ஜனவரி 14, 15ம் தேதிகளில் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும் மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்

🍒🍒சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் தேதி  மேலும்  நீட்டிக்கப்பட்டுள்ளது

🍒🍒மேல்நிலை,உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

🍒🍒வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை பயிலும் நடைமுறை; மத்திய அரசு அறிவிப்பு

🍒🍒ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

🍒🍒கடந்த வாரம் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. நவ.29 வரை 4 நாள்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை நவம்பர் 30 (திங்கள்கிழமை) முதல் நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் கூடுதல் ஒதுக்கீடு தேவை - ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்.

🍒🍒வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக  10 நாட்கள் சொர்க்கவாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு

டிச. 25 முதல் ஜனவரி 3 வரை திருப்பதி திருமலையில் சொர்க்கவாசல் திறப்பு 

- கோயில் நிர்வாகம்

🍒🍒ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் 

🍒🍒இந்த ஆட்சி சுற்றுப்புறச் சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கும் மனநிலையில் இல்லை

திமுக ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்த நாள் அந்த நாள் என எந்த வேறுபாடும் கிடையாது

- கனிமொழி

🍒🍒கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் - தலைமை செயலாளர் உத்தரவு

🍒🍒வரும் 30ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ராகவேந்திரா மண்டபத்தில்  சந்திக்கிறார் ரஜினி. அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல்

🍒🍒ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார்

🍒🍒அதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்

🍒🍒யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கொண்டு வந்த கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டத்துக்கு (லவ் ஜிகாத்) உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல்

இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டும் பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...