கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 21.12.2020 (திங்கள்)...

 🌹நம்மை தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல் 

நம்மை அவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகிவிடுவதே சிறப்பான பதிலடியாகும்.!

🌹🌹இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் 

முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள்.!!

🌹🌹🌹முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை விட 

இரக்க குணத்தால் ஏமாந்தவர்களே இன்று அதிகம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📚📚சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

📚📚தேவையில்லாமல் விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும் கல்வி இயக்குநரகம் உத்தரவு

📚📚தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர்: 484 ஆசிரியரல்லா பணிகள் உருவாக்கம்

📚📚RTI கட்டணத்தை பதிவு செய்ய வேண்டும்: அனைத்து துறை செயலாளர்களுக்கு உத்தரவு

📚📚School Safety and Security பயிற்சியை ஆண்டு ஜனவரி 31 வரை (31.01.2021) மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

📚📚கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலையோரம் வசித்த 71% குழந்தைகள் கல்வியை இழந்தனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

📚📚தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), டிசம்பர் 2020 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

📚📚ஜேஇஇ மெயின் தேர்வுக்கு பொதுத்தேர்வில் 75% மதிப்பெண் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்க கோரிக்கை

📚📚முதன்முறையாக கல்வித்துறை சார்பில் தொகுதிக்கு ஒரு தேர்தல் தொடர்பு அதிகாரி நியமனம்.

📚📚அரசு உதவிபெறும் கல்லூரி - உதவிப் பேராசிரியர்கள் பணி - விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2021.

📚📚விவசாயிகள் போராட்டங்களை கைவிட

வேண்டும் என மத்திய வேளாண்துறை

அமைச்சர் தமிழில் எழுதிய கடிதத்தை

ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி                                               

📚📚காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்; கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி.

📚📚காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தவர்கள் உள்பட மூத்த தலைவர்கள் 29 பேருடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். சனிக்கிழமை நடைபெற்ற  கூட்டத்தில் மீண்டும் ராகுல் காந்தியே கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

📚📚வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை ஆலோசனை நடைபெற்றது.

📚📚மேற்கு வங்கத்தில் பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும்: அமித்ஷா நம்பிக்கை.

📚📚கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

📚📚இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வைரஸ் பரவலை தடுக்க நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் புதிய வைரஸ் பரவுவதாக கிடைத்த தகவலையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது                                                     

📚📚விடியலை நோக்கி  என தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடக்கும் முன்பு, வரும் 23ஆம் தேதி முதல் திமுக சார்பில் மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.

-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

📚📚புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற பிப்ரவரி 2 முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

📚📚டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவர்கள்: பிரதமர் மோடிக்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு கடிதம்

📚📚மேற்கு வங்க ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூவர் மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில், ஆதரவாக குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பாணர்ஜி நன்றி

📚📚சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். 

மிஷன் 200 என வைத்து கொள்வோம். 

200 தொகுதிகளில் ஒரு தொகுதி அல்ல, ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது.

- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

📚📚'ஒன்றினைவோம் வா' என்ற தலைப்பில் கொரானா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்; இந்த நாட்டிற்கு தற்போது தேவையானது ஒன்றிணைதல் மட்டுமே - திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேச்சு

📚📚ஜெருசலமுக்கு புனிதப் பயணம் செல்ல வழங்கப்படும் மானியம் ₹20,000ல் இருந்து, ₹37 ஆயிரமாக உயர்த்தப்படும் - அதிமுக சார்பில் நடக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

📚📚வேட்பாளர்கள், தொகுதி குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள்.

வெற்றி பெறுபவர்தான் வேட்பாளர்.

எந்த வாக்குப் பெட்டியை திறந்தாலும் அதில் உதயசூரியன்தான் உதிக்க வேண்டும்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

📚📚"உட்பகை" நீக்கி ஆறு மடங்கு அயராது உழைக்க வேண்டும். குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்

- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

📚📚கேரள உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சபரிமலையில் தினமும் 5000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதி - கொரோனா நெகடிவ் சான்றிதழ், முகக்கவசம் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு

📚📚நான் எம்ஜிஆரின் நீட்சிதான் - காந்தியின் பேரனும் நான்தான்; நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்ஜிஆரின் வாரிசுதான்

- மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு

📚📚பொருளாதாரத்தில் பின்தங்கிய 700க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர் கல்விக்காக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ரூ.1.26 கோடி நிதியுதவி

📚📚78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் தேர்வு

📚📚நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பண பரிவர்த்தனை ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதலாக 150 ஊழியர்கள்

கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளில் ரசீது வாங்குவதால் காலவிரையம் &  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

📚📚நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள்: ஸ்டாலின்

திமுகவுக்கு இரண்டு பலம் உள்ளது; ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர்; தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள். 

திமுக வச்சக் குறி தப்பாது என நிருபிப்போம் எனவும் கூறினார்

📚📚TN EMIS கைபேசி வாயிலாக "கற்போம் எழுதுவோம் இயக்கம்” - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் Director Proceedings வெளியீடு 

📚📚அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும்: கல்லூரி இயக்ககம் அதிரடி

📚📚நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வலியுறுத்தல்

📚📚எல்லைப் பிரச்சினையால் மருத்துவ இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர் பாதிப்பு; ஆசிரியர் சங்கம் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...