கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 10.01.2021(ஞாயிறு)...

 


🌹நாமும் குடையும் ஒன்று தான் பல நேரங்களில் நாம் தேவையென்றால் நம்மை தூக்கி பிடிப்பார்கள் இல்லை என்றால் ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்.!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் விரைவு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறவுள்ளது-பொதுச்செயலாளர் மன்றம்.நா.சண்முகநாதன் தகவல்.

🌈🌈TNPSC டிசம்பர் - 2020 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

🌈🌈பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீடு முன் போராட்டம் 

🌈🌈எங்களால சமாளிக்க முடில பள்ளிகளை திறங்க பெற்றோர்களின் கோரிக்கை - நாளிதழ் செய்தி 

🌈🌈G.O 796- வருவாய் நிர்வாகம் - அதிகார வரம்பு - நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குதல் சார்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம், பொம்மை தயாரிக்க வல்லுநர்கள், மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு: ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு

🌈🌈துணைவேந்தர்கள் பதவி நீட்டிப்புக்கு கல்வியாளர்கள் வரவேற்பு: உயர்கல்வித்துறை செயலாளரின் முடிவுக்கு குட்டு

🌈🌈மறைமாவட்ட பதவிகளுக்கான தேர்தலில் பங்கேற்க அரசு / அரசு நிதியுதவி பெறும் 

பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தடை

🌈🌈சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு மாறுபட்டதால் 13 ஆண்டுகளுக்கு முன் வேலை மறுக்கப்பட்டவருக்கு நடத்துநர் பணி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த பிறகு வயதை திருத்தும் செய்துள்ளார்; 13 ஆண்டுகளாக வழக்கிலும் தீர்வு காணப்படவில்லை. சில தவறுகள் வாழ்க்கையின் பாதையையே மாற்றி விடுகிறது என நீதிபதி சுரேஷ்குமார் கருத்து தெரிவித்தார்.

🌈🌈ஜனவரி-15ல் காங்கிரஸ் போராட்டம்

விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15ஆம் அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது

🌈🌈வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கைவிட்டார்.*

எம்.பி.சி பிரிவினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியரல்லாத பிற சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்கலாம். 20 சதவீதத்தில் பெரும்பகுதி வன்னியர்களுக்கு, பிறருக்கு ஒரு பகுதி கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்து சட்டப்பேரவை தொடங்குவதற்குள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும் அரசுக்கு நிபந்தனை அளித்துள்ளார்

🌈🌈நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரானோ தடுப்பூசி போடும் பணி தொடங்கும் - மத்திய அரசு

3 கோடி முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் - மத்திய அரசு

🌈🌈சில தொகுதிகளில் அதிமுக தோற்றால் தனிப்பட்ட நபர்களே காரணமாக இருக்க முடியும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.சில தொகுதிகளில் அதிமுக தோற்றால் அதற்கு தலைமை காரணமாக இருக்க முடியாது என அமைசர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.

🌈🌈வாட்ஸ்அப்பின் கடுமையான கட்டுப்பாடுகளால் பயனாளர்கள் அதிர்ச்சி

டெலிகிராம்க்கு மாறிவருகிறார்கள்

🌈🌈உலகத்தில் மிக பழமையான மொழி தமிழ் என்று நாம் கர்வத்தோடு கூறவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காணொலி காட்சி மூலம் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

🌈🌈யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.*

ஈழ தமிழர்களின் பாரம்பரிய நினைவு சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

🌈🌈எந்த ஆதாரமும் இல்லாமல் திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நீதிமன்றத்தில் புறக்கணிக்கப்பட்ட வழக்குகளை எடுத்துப்பேசி ஆதாரம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார். தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது என குறிப்பிட்டார்.

🌈🌈யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். 

போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுகவினர் பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

🌈🌈அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்.

வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால்  நடவடிக்கை.

டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு.

🌈🌈தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் 

சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்

விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்

🌈🌈வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக தமிழகத்தில் புதிய துறை உருவாக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழக மக்கள் பேராதரவுடன் விரைவில் அமையவிருக்கும் திமுக தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

🌈🌈மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் : பள்ளிகளைத் திறந்ததும் வழங்க திட்டம் 

தலைமை செயலாளர் கூட்டத்தில் முடிவு

🌈🌈பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் மீது டிரம்ப் கடும் தாக்கு.

டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க ஆராய்ந்து வருகிறோம்  என டிரம்ப் கருத்து.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...