கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்டது.
உள் ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதா குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7% தனி இடஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது.
வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது, சாதிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். எம்பிசியில் உள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 7% உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரவில் 68 உட்பிரிவுகள் உள்ளன என்றார். தொடர்ந்து, மசோதா ஒருமனதாக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.