கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

 தனியார் நிறுவனங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் கன்னடர்களுக்கு மட்டுவே வேலை - கர்நாடக அமைச்சரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்...


கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...


கர்நாடக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்


அரசு, தனியார் துறைகளில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு 100% கன்னடர்களை நியமிக்கும் வகையில் மசோதா நாளை தாக்கல்...






கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு... முக்கிய அம்சங்கள் என்ன?


இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


கர்நாடகாவில் கன்னடர்களுக்கே முன்னுரிமை தரும் வகையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில், பிற மாநிலத்தவர் அதிக வேலைவாய்ப்புகளை பறிப்பதாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்காக அம்மாநிலத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டியலிட உள்ளது.


இடஒதுக்கீடு எவ்வளவு?



கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மை பதவிகளில் 75 சதவீதம், அதற்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இடஒதுக்கீடு ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களது வேலைக்கு பயன்படுத்தும் குரூப் ‘சி’, குரூப் ‘டி’ தொழிலாளர்கள் கன்னடர்களாகவே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



யார் கன்னடர்கள்?

இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மீறினால் என்னவாகும்?

இந்த சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அரசு குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீடு வரும்வரை அந்த தனியார் நிறுவனம் தினமும் ரூ.100 அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், “மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 100 சதவீத கன்னடர்களை கட்டாயமாக சி, டி கிரேடு பணிகளில் அமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னட தேசத்தில் கன்னடர்கள் வேலை பறிக்கப்படுவதைத் தவிர்த்து, தாயகத்தில் சுகபோக வாழ்வைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனில் அக்கறை காட்டுவதே எங்கள் முன்னுரிமை.




முதல்வர் சித்தராமையாவின் ட்வீட் (அது இப்போது நீக்கப்பட்டதாகத் தெரிகிறது) குறித்து கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார், "நிர்வாகத்தில் (நிலை) 50% பேருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலாண்மை அல்லாத நிலையில், 70% பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது... அத்தகைய திறன்கள் இல்லை என்றால் , ஆட்களை அவுட்சோர்ஸ் செய்து அவர்களுக்கு இங்கு வேலை கொடுக்கலாம் ஆனால், உள்ளூரில் கிடைக்கும் திறன்களுக்கு முன்னுரிமை கொடுக்க அரசு ஒரு சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது"



“தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.


இது குறித்து வரும் நாட்களில் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்”


- கர்நாடக முதல்வர் சித்தராமையா X தளத்தில் பதிவு



காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...


>>> காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் - அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...



 காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் -  அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...


போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.


சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருப்போரின் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O.Ms.No.67, Dated: 22-01-2010) அன்று பிறப்பிக்கப்பட்டது.


உயர்நீதிமன்றம் தடை


இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது.


அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடைப் பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.


மேல்முறையீடு


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 119 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


அரசாணை செல்லும்


மனுதாரர்களின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் எனவும், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த ஆண்டில் சீருடைப் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் உத்தரவிட்டது.



>>>  காவலர் பணிநியமனம் -  பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு - அரசாணை...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாவட்டம் மற்றும் பாட வாரியாக 1895 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு விவரம் (1895 Guest Lecturer Allotment - District Wise & Subject wise)...

 

1895 கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான www.tngasa.in என்ற இணையதளம் தொடக்கம்...


>>> மாவட்டம் மற்றும் பாட வாரியாக 1895 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு விவரம் (1895 Guest Lecturer Allotment - District Wise & Subject wise)...



>>> செய்தி வெளியீடு எண்: 2262, நாள்: 15-12-2022 (Press Release No.2262, Dated: 15-12-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



>>> அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கான தேர்வு - பதிவு செய்யும் முறை...


மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையின் பொழுது கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding the Reservation to be observed during the admission of students for Higher Secondary Education) ந.க.எண்: 88979/ டபிள்யு1/ இ1/ 2016, நாள்: 23-06-2022...



>>> மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையின் பொழுது கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding the Reservation to be observed during the admission of students for Higher Secondary Education) ந.க.எண்: 88979/ டபிள்யு1/ இ1/ 2016, நாள்: 23-06-2022...





தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு – 40% ஆக அதிகரிப்பு...



 தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீதான இறுதி நாள் விவாதத்தின் பொழுது, அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.



மகளிர் இடஒதுக்கீடு:

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்டு 20ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் படி கடைசி நாள் அமர்வு  நடைபெற்றது. 



அதில் நீட் தேர்வு மற்றும் காவல் துறைக்கான சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்காக தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.



அரசு வேலைவாய்ப்பில், தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு(Reservation) வழங்க ஏதுவாக விவரம் கோரியது TNPSC...



 அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரம் கோரியுள்ளது. குரூப் – 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 – 10ம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும். 11, 12 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.






அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் EWS (OC) 10% இடஒதுக்கீடு...

 


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடப்பு ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்துள்ளது.


இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சினைக்கு ஒரு பயனுள்ள தீர்வை அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த முடிவு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவால் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப் படிப்பில் கிட்டத்தட்ட 1,500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 2,500 இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 550 முன்னேறிய வகுப்பு மாணவர்களும், முதுகலைப் பட்டப்படிப்பில் சுமார் 1,000 பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு மாணவர்களும் பலன் பெற உள்ளனர்.


இதனால், மொத்தமாக கிட்டதட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் பின்தங்கிய பிரிவினருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



வன்னியர்கள், சீர்மரபினர்கள் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு - 26.02.2021 முதல் நடைமுறை - செய்தி வெளியீடு எண்: 501, நாள்: 26-07-2021...


தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் நடப்பாண்டு முதல் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு பின்பற்றப்படும் - தமிழ்நாடு அரசு.


வன்னியர்கள் மற்றும் சீர்மரபினர்கள், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை வெளியீடு.


சிறப்பு ஒதுக்கீட்டை 2021 பிப்ரவரி 26 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு.


செய்தி வெளியீடு எண்: 501, நாள்: 26-07-2021...





அரசுப் பணிகளில் சேர்வதற்கும், உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை (G.O.Ms.No.: 75, Dated: 26-07-2021) வெளியீடு...

 


ABSTRACT 

Public Services - Reservation of appointments in Public Services - Special Reservation to MBC (Vanniakula Kshatriya), MBC&DC and MBC within the reservation provided for Most Backward Classes and Denotified Communities — Act enacted - Modification to the roster - Orders - Issued. 

HUMAN RESOURCES MANAGEMENT (K) DEPARTMENT 

G.0 (Ms.) No.75, Dated 26.07.2021  

Read: 

1. G.O.(Ms) No. 241, Personnel and Administrative Reforms (K)Department, dated 29.10.2007. 

2. G.O.(Ms.) No. 101, Personnel and Administrative Reforms (K) Department, dated 30.5.2008. 

3. G.O.(Ms.) No. 206, Personnel and Administrative Reforms (K) Department, dated 6.11.2008. 

4. G.O.(Ms.) No. 65, Personnel and Administrative Reforms (K) Department, dated 27.05.2009. 

Read also: 

5. Tamil Nadu Act No.8 of 2021 


அரசுப் பணிகளில் சேர்வதற்கும், உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை (G.O.Ms.No.: 75, Dated: 26-07-2021) வெளியீடு...


வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறப்பு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...


வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.


அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்திருந்தார். அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.


இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> Click here to Download G.O.Ms.No.: 75, Dated: 26-07-2021...


மாணவர் சேர்க்கை - இட ஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...

 


அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் உத்தரவு...



செய்தி வெளியீடு எண்:277, நாள்: 15.06.2021


செய்தி வெளியீடு


தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்ந்து, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், சட்டம், கால்நடை உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை...





அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

 


அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயில 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் 10-06-2021  மாலை 4.30 மணிக்கு ஆலோசிக்க உள்ளதாக தகவல்...

பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை - தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்...



 தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது.


நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை- மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்.


ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு.


பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை - தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்...

மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு...



 அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்விஆண்டில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. 


இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் உறுதியளித்தது. 


இந்நிலையில், எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உயிரி தொழில்நுட்ப வியல் பிரிவில் 3 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேநேரம், கணக்கீட்டு தொழில்நுட்பம் பிரிவில் தகுதியான மாணவர்கள் (EWS பிரிவு) யாரும் இல்லாததால் அதில்இடங்கள் எதுவும் ஒதுக்கப்பட வில்லை.


விதிமீறல்

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவது விதிமீறல்.


தமிழகத்தில் மிகவும் குறை வான எண்ணிக்கையில் இருக்கிற, இடஒதுக்கீட்டில் வராத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பிற பிரிவு மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும். இதை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றனர்.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைப்படிதான், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வருகிறது. எனவே, இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்றனர்.

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

 


தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் (Supreme Court) மறுப்பு தெரிவித்துள்ளது. பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு (Reservation Quota) பின்பற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது. காயத்ரி என்பவரின் வழக்குடன் தினேஷ் என்பவரின் வழக்கும் மார்ச் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்...





 கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்டது. 


உள் ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதா குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வழங்கவும்,  சீர்மரபினருக்கு 7% தனி இடஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது. 


வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு  தற்காலிகமானது, சாதிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். எம்பிசியில் உள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. 7% உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரவில் 68 உட்பிரிவுகள் உள்ளன என்றார். தொடர்ந்து, மசோதா ஒருமனதாக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...