கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்...


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கியது.

கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கவில்லை என ஆசிரியர்கள் தரப்பிலும் முறையாக கல்வி கற்க முடியவில்லை என மாணவர்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்ததால், பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

அதன் படி, பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான பொதுத் தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் சூழலில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோபிசெட்டிபாளையம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு, விளையாட்டு மைதானம் தொடக்கம், மருந்தக பூமி பூஜை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப் படும்.  முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது .


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. உருது படித்த ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...