கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.03.2021 (திங்கள்)...

 


🌹எவரையும் எதிர்பார்த்து வாழவும் கூடாது எவருக்கும் நாம் பாரமாகவும் வாழக்கூடாது.

நமக்கு கிடைத்தது போதும் என்ற வாழ்க்கையே சிறப்பானது.!

🌹🌹கெட்டவன் சாகும் போது தான் கஷ்டப்படுவான்.

ஆனால் நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்.!!

🌹🌹🌹எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க 

நமக்குதான் எவ்வளவு

பட்டாலும் புரிவது இல்லை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈நேற்று நாகை மாவட்டம் திருமருகலில் ஆசிரியர் இனக் காவலர் ஐயா பாவலர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு வீரவணக்கம் செலுத்தினார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்  முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள்.

🌈🌈ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு -  கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என  தேசிய தேர்வு முகமை அறிவிப்பு 

🌈🌈கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்படும்

🌈🌈பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும்

🌈🌈பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், ஜூனில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது

🌈🌈கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 

🌈🌈1 முதல் 10 வகுப்பு வரை கையாளும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்கள் கற்பிக்கும் வகுப்பிற்கான பயிற்சித் தாள்கள் தயாரிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈மார்ச் 27 முதல் தேர்தல் முடியும் வரை தொடர்ந்து பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🌈🌈வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது.

🌈🌈கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.- GUIDELINES -pdf ல் வெளியீடு.

🌈🌈மாணவர்களுக்கு கரோனா அதிகரித்தால் பள்ளிகளை மூட ஆந்திர அரசு அனுமதி

🌈🌈தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் கொரோனா தீவிரம்: 5 வகை யுக்தியை கடைபிடிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.

🌈🌈கொரோனா பரிசோதனை என்ற பெயரில் பிரசாரத்திற்கு போகவிடாமல் தடுத்தனர்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

🌈🌈பாஜக எம்.எல்.ஏ மீது விவசாயிகள் சரமாரி தாக்குதல்: எம்எல்ஏ மீதான தாக்குதலுக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம்.

🌈🌈தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய அவர், சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றார்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறிய ராதாகிருஷ்ணன், ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மட்டும் படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

🌈🌈திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த சதி

மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் கே.என்.நேரு புகார்

காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கே.என். நேரு

🌈🌈திமுக-வை வீழ்த்த உங்கள் உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் ; நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து திமுக ஆட்சி நடைபெறுவதை பார்க்கவேண்டும்...

முதல்வர் பழனிசாமி குறித்து காங்கேயம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🌈🌈டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிப்பு 

திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி

- கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

🌈🌈சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

🌈🌈அமைச்சர் எம்.சி சம்பத்தின், சம்பந்தி இளங்கோவனுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் மேலும் ₹3 கோடி பணம் பறிமுதல் - தற்போது வரை மொத்தம் ₹9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

🌈🌈நான் பிறப்பால் தமிழனல்ல; தமிழரின் மனது புரியும். தமிழை மெதுவாக கற்க முயற்சி செய்கிறேன் 

- ராகுல் காந்தி

🌈🌈தேசிய அளவிலான புதிய கூட்டணிக்கு ராகுல் தலைமை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு.

அதிமுக நிழலில் பாஜக

தமிழகத்தில் பாஜகவால் வேரூன்ற முடியாததால், அதிமுகவை அச்சுறுத்தி, மிரட்டி அவர்கள் நிழலில் காலூன்ற முயலுகின்றனர்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

🌈🌈இந்தியாவை காப்பாற்றுங்கள்

மதவாத கும்பலில் மாட்டி தவிக்கும் இந்தியாவை ராகுல்காந்தி காக்க வேண்டும் ; அதற்காக இப்போதே தமிழகத்தில் உள்ள கூட்டணிபோல இந்திய அளவில் ஒரு கூட்டணியை அவர் உருவாக்க வேண்டும்

சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

🌈🌈இது  பழைய அதிமுக அல்ல ; இது  பாஜக முககவசம் அணிந்த அதிமுக.

ஏன்  மோடி  அமித்ஷா  காலில்  விழுந்து கிடக்கிறார்  எடப்பாடி. 

தமிழக மக்கள் அதை விரும்பவில்லை

ராகுல் காந்தி  கடும்  விமர்சனம்

👉தமிழகத்தில் முகக்கவசம் போன்றது அதிமுக அதனை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஆர் எஸ் எஸ் + பாஜக கூட்டணி முகமாக இருக்கிறது: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு

👉மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கப்போகிறார்

தேர்தல் முடிவுகளை பார்க்காமலேயே என்னால் இதனை சொல்ல முடியும்

-  ராகுல் காந்தி

🌈🌈தமிழகத்தில் பா.ஜ.கவை பின்வாசல் வழியாக அழைத்து வரும் வேலையை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,தங்கமணி செய்கின்றனர்.

தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விழும் ஓவ்வொரு வாக்கும் பா.ஜ.க, மோடிக்கு விழும் வாக்குகள் .

கோவை சுகுணாபுரத்தில் எம்.பி.ஜோதிமணி பிரச்சாரம்.

🌈🌈வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 124வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

🌈🌈வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது.

🌈🌈மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு ஒரு சில நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

🌈🌈புதுச்சேரியில் ஆதார் தகவல்களை பெற்று தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ள பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார்.

🌈🌈நான் கேட்பது மக்களின் வாக்கை அல்ல; நம் பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை; தேர்தல் பரப்புரையில் சீமான் பேச்சு.

🌈🌈இந்தியா, வங்கதேம் இடையே சுகாதாரம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது

🌈🌈பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

🌈🌈ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றுபவா்களுக்காக 2,00,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளதற்கு ஐ.நா. பாராட்டுத் தெரிவித்துள்ளது.

🌈🌈பாஜக இந்தியாவின் பெயரை மாற்ற முடிவெடுத்தால் ''நான் இந்தியாவின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவேன்'' என்று சீமான் தெரிவித்தார்.

பாஜக 20 தொகுதியை வெல்லப் போவதுமில்லை. நாங்கள் விடப் போவதுமில்லை என்றும் சீமான் கூறினார்.

பாஜகவுக்கு தைரியம் இல்லை

வடநாட்டில் இருந்து சுமார் 1 கோடி பேர் தமிழ்நாட்டில் வந்துவிட்டார்கள். வெளி மாநில மக்களுக்கும் தமிழகத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று பாஜக தலைவர் சொல்கிறார். பாஜக முதலில் வெல்லட்டும். அதன்பிறகு திட்டத்தை பற்றி பேசட்டும். ஒரு உருப்படியான திட்டத்தை சொல்லியாவது ஓட்டுக் கேட்க பாஜகவுக்கு தைரியம் இல்லை. ஆனால் நாட்டின் பெயரை மாற்ற போவதாக கூறுகிறார்கள்.

வெறுமென வேடிக்கை பார்க்க மாட்டேன்

இதனை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அப்போ நான் இந்தியாவின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவேன். 20 சீட்டை வாங்கி விட்டு பாஜக இந்த ஆட்டம் போடுகிறது. அவர்களுக்கு துணையாக 2 முதலமைச்சர். ஒரு நிதி அமைச்சர், ஒருவர் உள்துறை அமைச்சர் உள்ளனர். பாஜக அந்த 20 தொகுதியை வெல்லப் போவதுமில்லை. நாங்கள் விடப் போவதுமில்லை என்று சீமான் தெரிவித்தார்.

🌈🌈இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...