கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.



இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்வி ஆண்டுக்கான ( 2021-22 ) மாணவர் சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் , தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் , தற்போது அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.



இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : 

கொரோனா பரவலால் பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது . எனினும் , சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்வி சார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் , அவர்களை முறையாக வரவேற்று , உரிய முன் விவரங்களை வாங்கி வைத்து , பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே போல , அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும் , சுற்றியுள்ள பகுதிகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் இணையதளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணிகளின் போது கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப் பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.


இவ்வாறு அவர்கள் கூறினர் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN - Quarterly exam - QP Download schedule

  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - திறன் - காலாண்டுத் தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை Dear team,  Please...