கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பணி - கல்வித் துறை அதிகாரிகள் தகவல் - ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பணி...

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . மேலும் தவிர்த்த பிற வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன நோய் பரவல் சூழல் சரியான பின்னர் +2வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதற்கிடையே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செய்முறை தேர்வுகள் முடிந்த பின் மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதேநேரம் ஆசிரியர்கள் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்நிலையில் தோற்று வராமல் தீவிரம் கருதி விடுமுறை வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சுழற்சி முறையில் பணி இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக துறை செயலாளருக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது எனவே அரசு தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் நோய் பாதிப்பில் உள்ளவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகிப் பெற்றுக் கொள்ளலாம் அதே சமயம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி

  6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி Website address to download Annual exam question pa...