அரசாணை எண்: 2027, நாள்: 14-05-2021ன் படி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் ஆணையர் பணியிடமாக மாற்றம்...
பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கான அனைத்து அதிகாரங்களும் பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைப்பு...
பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறையில் துறையின் முதன்மைச் செயலாளரை அடுத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பொறுப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு பதிலாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் அதற்குரிய அனைத்து அதிகாரங்களுடன் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்குநர் பதவியிடத்தில் முதன் முறையாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இயக்குநர் அந்தஸ்தில் IAS அதிகாரிகளே இல்லாத நிலையில் தற்போது முதன் முறையாக IAS அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
>>> அரசாணை எண்: 2027, நாள்: 14-05-2021...