கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி செயலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளிக் கல்வி செயலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

School Education Department Secretary to appoint district wise higher officers to monitor welfare programs for students - Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools, High and Higher Secondary Schools, CEO Offices, DEO Office and BEO Office...



 மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வுக்கான பொருள்கள்...


 அனைத்து மாவட்டங்களிலும் அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகம் , மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய கல்வித்துறை உயர் அதிகாரிகள் நியமனம்...


School Education Department Secretary to appoint district wise higher officers to monitor welfare programs for students - Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools, High and Higher Secondary Schools, CEO Offices, DEO Office and BEO Office...








2021-2022ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE to BT Conversion) 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க (As per G.O.Ms.No 176, Edn Dept, Dated:17.12.2021, Para 2, Sl.No.ix) பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு...


2021-2022ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE to BT Conversion) 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க (As per G.O.Ms.No 176, Edn Dept, Dated:17.12.2021, Para 2, Sl.No.ix) பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக்கல்வித்துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய அவர்களின் Mobile OTP Verification செய்யப்படுதல் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம்...



 பள்ளிக்கல்வித்துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய அவர்களின் Mobile OTP Verification செய்யப்படுதல் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம்...











மாணவர் நல திட்டங்கள்: பெற்றோருக்கு 'வாட்ஸ் ஆப்' தகவல்

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலர் குமர குருபரன் அனுப்பியுள்ள கடிதம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபற்றி பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் மொபைல் போன் எண்களை பெற வேண்டும்.

இதுவரை, 35 லட்சம் மாணவர்களின் பெற்றோர் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தலைமை ஆசிரியர்கள் துணையுடன், மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எடுத்துரைக்க வேண்டும். பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., அனுப்பப்படும் விபரத்தை, பெற்றோருக்கு தெரியப்படுத்தி, இப்பணியை செய்து முடிக்க வேண்டும். 'வாட்ஸ் ஆப்' யில் விரைந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - புதிய பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO Posts) பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டது - மறுநிர்ணயம் செய்யப்பட்டதற்கு தனியாக தொகுப்பு குறியீடு (Drawing officer code) தமிழ்நாடு கருவூல் தொகுப்பு பதிவேடு (TNTC) மற்றும் அவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக அதிகார ஆணை (Express Pay Authorisation) வழங்குதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கடிதம் (Tamil Nadu Elementary Education Department - Sanctioned new posts and transfer of Block Education Officers Posts to requiring Unions - Drawing officer code for re-designated Tamil Nadu Treasury Collection Register (TNTC) and issuance of Express Pay Authorization to them - Regarding - Principal Secretary, Government of School Education Department Letter) எண்: 21181/ தொ.க.1(1) / 2022-1, நாள்: 21-10-2022...


>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - புதிய பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO Posts) பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டது - மறுநிர்ணயம் செய்யப்பட்டதற்கு தனியாக தொகுப்பு குறியீடு (Drawing officer code) தமிழ்நாடு கருவூல் தொகுப்பு பதிவேடு (TNTC) மற்றும் அவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக அதிகார ஆணை (Express Pay Authorisation) வழங்குதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கடிதம் (Tamil Nadu Elementary Education Department - Sanctioned new posts and transfer of Block Education Officers Posts to requiring Unions - Drawing officer code for re-designated Tamil Nadu Treasury Collection Register (TNTC) and issuance of Express Pay Authorization to them - Regarding - Principal Secretary, Government of School Education Department Letter) எண்: 21181/ தொ.க.1(1) / 2022-1, நாள்: 21-10-2022...




கல்வி தரத்தை உயர்த்துவாரா புதிய முதன்மை செயலரான காகர்லா உஷா ? ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு...



தமிழக பள்ளி கல்வி துறையின், புதிய முதன்மை செயலரான காகர்லா உஷா மொழி கொள்கை, கல்வி கொள்கை, ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட சவால்களை தாண்டி, அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தி.மு.க., அரசில், துறை ரீதியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதல்வரின் முதன்மை தனி செயலராக உள்ள உதயசந்திரனிடம், பள்ளி கல்வி, உயர் கல்விக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது அனுபவத்தின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் துவங்கிஉள்ளன.முதல் கட்டமாக, இயக்குனர் பொறுப்பில், நந்தகுமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளி கல்வி துறையின் தலைமை பொறுப்பில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டு கழகமான, 'டிட்கோ'வில் இருந்து, பள்ளி கல்வி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



 



ஏற்கனவே உதயசந்திரன், பள்ளி கல்வி முதன்மை செயலராக இருந்தபோது, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக, 2017 பிப்ரவரியில், காகர்லா உஷா நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் மாற்றப்பட்டார்.இவரது பணிக் காலத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதான வழக்குகள் மற்றும் தேர்வு பிரச்னைகள் தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதியோர் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த, மின் டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலை அதிபர் குடும்பத்தை சேர்ந்த காகர்லா உஷா, சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் பொருளியல் படித்தவர். பின், ஐதராபாத் மத்திய பல்கலையில் முதுநிலையும், புதுடில்லி வெளிநாட்டு வணிகத்துக்கான, உயர் கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ.,வும் படித்தவர். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, 1994ல் தேர்ச்சி பெற்றார்.காஞ்சிபுரத்தில் உதவி கலெக்டர்; பெரியகுளத்தில் துணை கலெக்டர்; ஆதி திராவிடர் நலத் துறையில், துணை செயலர்; தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரி; வணிக வரித்துறை இணை கமிஷனர்; சென்னை மாநகராட்சி கல்வி பிரிவு கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்.




தற்போது, பள்ளி கல்வி முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ள உஷா, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி தரத்தை, தனியார் பள்ளிகளின் தரத்துக்கு நிகராக உயர்த்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக, பல்வேறு பிரச்னைகளுக்காக போராடும், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என, ஆசிரியர் சங்கங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.தமிழக அரசின் மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கை, 'நீட்' தேர்வு விவகாரம் போன்ற நிலைப்பாடுகளில், சவால்களை சமாளிப்பார் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தமிழக பள்ளி கல்வி துறையின், புதிய முதன்மை செயலரான காகர்லா உஷா மொழி கொள்கை, கல்வி கொள்கை, ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட சவால்களை தாண்டி, அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தி.மு.க., அரசில், துறை ரீதியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதல்வரின் முதன்மை தனி செயலராக உள்ள உதயசந்திரனிடம், பள்ளி கல்வி, உயர் கல்விக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது அனுபவத்தின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் துவங்கிஉள்ளன.முதல் கட்டமாக, இயக்குனர் பொறுப்பில், நந்தகுமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளி கல்வி துறையின் தலைமை பொறுப்பில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டு கழகமான, 'டிட்கோ'வில் இருந்து, பள்ளி கல்வி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



ஏற்கனவே உதயசந்திரன், பள்ளி கல்வி முதன்மை செயலராக இருந்தபோது, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக, 2017 பிப்ரவரியில், காகர்லா உஷா நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் மாற்றப்பட்டார். இவரது பணிக் காலத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதான வழக்குகள் மற்றும் தேர்வு பிரச்னைகள் தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதியோர் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த, மின் டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலை அதிபர் குடும்பத்தை சேர்ந்த காகர்லா உஷா, சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் பொருளியல் படித்தவர். பின், ஐதராபாத் மத்திய பல்கலையில் முதுநிலையும், புதுடில்லி வெளிநாட்டு வணிகத்துக்கான, உயர் கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ.,வும் படித்தவர். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, 1994ல் தேர்ச்சி பெற்றார்.காஞ்சிபுரத்தில் உதவி கலெக்டர்; பெரியகுளத்தில் துணை கலெக்டர்; ஆதி திராவிடர் நலத் துறையில், துணை செயலர்; தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரி; வணிக வரித்துறை இணை கமிஷனர்; சென்னை மாநகராட்சி கல்வி பிரிவு கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்.




தற்போது, பள்ளி கல்வி முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ள உஷா, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி தரத்தை, தனியார் பள்ளிகளின் தரத்துக்கு நிகராக உயர்த்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக, பல்வேறு பிரச்னைகளுக்காக போராடும், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என, ஆசிரியர் சங்கங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன. தமிழக அரசின் மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கை, 'நீட்' தேர்வு விவகாரம் போன்ற நிலைப்பாடுகளில், சவால்களை சமாளிப்பார் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பள்ளி கல்வி தலைமை பொறுப்பில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இயக்குநரின் அதிகாரங்களில் அதிரடி மாற்றம்...

 பள்ளி கல்வி இயக்குநர் பணியிடத்தை பள்ளி கல்வி கமிஷனராக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 



பள்ளி கல்வி இயக்குநரின் பொறுப்புகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரை, அரசின் சார்பில் செயலர்அல்லது முதன்மை செயலர் செயல்படுவர். அவர்களின் கீழ் பல்வேறு பிரிவு இயக்குநர்கள் இயங்குவர். கடும் போட்டிஅவர்களில் பள்ளி கல்வி இயக்குநர் என்ற பதவி மட்டுமே தலைமை பொறுப்பாக கருதப்படுகிறது.



அரசு தரப்பில் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருந்தாலும், பள்ளி கல்வி இயக்குநரே அதிகாரம் மிக்கவராக இருப்பார். பெரும்பாலான நிர்வாக பணிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குநரே முடிவெடுப்பார். அவரது முடிவுக்கு அரசின் செயலர் ஒப்புதல் வழங்குவார். அதனால், பள்ளி கல்வி இயக்குநர் பதவிக்கு வர, மற்ற இயக்குநர்களிடம் கடும் போட்டி உண்டு.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், பள்ளி கல்வி நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பனின் அனைத்து அதிகாரங்களும், பள்ளி கல்வி கமிஷனர் என்ற பதவிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன. 



பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பில், டி.என்.பி.எஸ்.சி., செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.


சிலர் எதிர்ப்பு


இவர், டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர். குரூப் தேர்வு முறைகேடுகளில் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டவர். ஆசிரியர் தேர்வு வாரியத்தில், 'டெட்' தேர்வு முறைகேடுகளையும் கண்டுபிடித்தவர்.இவரது நேரடி நிர்வாகத்தின் கீழ், பள்ளி கல்வியின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பணியாற்ற உள்ளனர். 



பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி, தேர்வுத்துறை, மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும், கமிஷனரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகின்றனர்.இந்த சீர்திருத்தம் ஒரு தரப்பில் வரவேற்பையும், இன்னொரு தரப்பில் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் நிர்வாகத்தை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மாற்றக் கூடாது என ஆசிரியர்கள் சங்கத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 



ஆங்கிலேயர் ஆட்சியின் போது, 200 ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வி இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டதால், அதை மாற்றக் கூடாது என தெரிவித்துள்ளனர்.




பரிந்துரை கடிதம்


ஆசிரியர்கள் மற்றும்அதிகாரிகள், தங்களின் பணி நியமனம், பதவி உயர்வு, பென்ஷன், பணியிட மாற்றம் போன்றவற்றுக்கு, பள்ளி கல்வி இயக்குநரை சந்தித்து, பரிந்துரை கடிதம் பெறுவர். இனி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு இந்த அதிகாரங்கள் வருவதால், அவரை ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தினர் எளிதில் அணுக முடியாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.





பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கான அனைத்து அதிகாரங்களும் பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைப்பு...

 அரசாணை எண்: 2027, நாள்: 14-05-2021ன் படி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் ஆணையர் பணியிடமாக  மாற்றம்...


பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கான அனைத்து அதிகாரங்களும் பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைப்பு...


பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறையில் துறையின் முதன்மைச் செயலாளரை அடுத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பொறுப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு பதிலாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் அதற்குரிய அனைத்து அதிகாரங்களுடன் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்குநர் பதவியிடத்தில் முதன் முறையாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இயக்குநர் அந்தஸ்தில் IAS அதிகாரிகளே இல்லாத நிலையில் தற்போது முதன் முறையாக IAS அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்பட   உள்ளது குறிப்பிடத்தக்கது.


>>> அரசாணை எண்: 2027, நாள்: 14-05-2021...



அரசாணை எண்: 30 மற்றும் 31 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை), நாள்: 13.01.2021 - பின்பற்றி பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்...

 


அரசாணை எண்: 30 மற்றும் 31 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை), நாள்:  13.01.2021 - பின்பற்றி பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ... [School Education Secretary Letter D.O.No.: 19359/ GL-II /2020-7, Dated: 13-01-2021...]

>>> Click here to Download School Education Secretary Letter D.O.No.: 19359/ GL-II /2020-7, Dated: 13-01-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...