கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு (நாளிதழ் செய்தி)...

 


புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு  (நாளிதழ் செய்தி)...

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு புதிதாக 1,575 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நான்கு மாதங்களுக்கு முந்தைய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, தாமதமாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர் பதவிகளுக்கு 1,575 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, தேர்தலுக்கு முன், பிப்.,1ல் கையெழுத்தானது.ஆனால், அதை பள்ளி கல்வி செயலகம், நான்கு மாதங்களாக கோப்பிலேயே வைத்து, நேற்று திடீரென வெளியிட்டுள்ளது.

பிப்., 1 அரசாணையில், பள்ளி கல்வித்துறை முன்னாள் முதன்மை செயலர் தீரஜ்குமார் கையெழுத்திட்டுள்ளார். இந்த அரசாணையின்படி, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிகமாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தேவைக்கு அதிகமானவை என்ற வகையில், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

அந்த இடங்களை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்க தேவைப்படும் முதுநிலை ஆசிரியர் இடங்களாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த 1,575 இடங்களில் 50 சதவீதமான 787 இடங்கள், தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும், மீதமுள்ள இடங்கள் புதிய பட்டதாரிகள் வழியாகவும் நிரப்பப்படும் என, அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.


 

>>> அரசாணை (நிலை) எண்:18, நாள்: 01-02-2021... ( மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் பாட வாரியாக)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...