கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Appointment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Appointment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை




இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை


இன்று (24/7/25) பணிநியமன ஆணை பெற்று  பணி ஏற்க உள்ள இடைநிலை ஆசிரியர்களை  வாழ்த்தி வரவேற்கிறோம்

💐💐💐💐💐💐💐💐💐


பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை


அசல் மற்றும் நகல் ஒரு செட்


1) பணி நியமன ஆணை 

2) அனுமதி கடிதம் 

3) 10 & +2 சான்றிதழ்

4) D T Ed சான்றிதழ் 

5) TET சான்றிதழ் 

6) சாதிச் சான்றிதழ் 

7) வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் 

8) ஆதார் அட்டை 

9) PAN CARD

10) BANK PASSBOOK FIRST PAGE

11) Physical fitness certificate


2430 SGTs Appointment orders issuing ceremony Invitation



புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா  அழைப்பிதழ் (24.07.2025)


Invitation to the ceremony for issuing appointment orders to 2430 newly appointed Secondary Grade Teachers (24.07.2025)



>>> அழைப்பிதழ் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SGT Appointment Order Ceremony - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Appointment Order Ceremony for Secondary Grade Teachers to be held in Chennai on 24.07.2025 - Proceedings of the Director of Elementary Education


TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து DEE செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / ஊராட்சி / நகராட்சி /மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம். 24.07.2025 வியாழன் அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பணிநியமன ஆணை வழங்கும் பணி மாவட்டங்களில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டியாக பணிபுரியம் பணிக்காக - பணி ஒதுக்கீடு வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - 24.07.2025 | Director Proceedings


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2430 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1 ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.


 அதுசமயம் இடைநிலை ஆசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெறும் பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படவுள்ளது . இவ்விழாவானது 24.07.2025 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது . அதன்பொருட்டு , பணிநியமனம் பெறுவதற்கு பணிநாடுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தோராயமாக 5,000 - க்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனவே , பணி நியமன ஆணை பெறவுள்ள பணிநாடுநர்களை அவரவர் மாவட்டத்திலிருந்து விழா நடைபெறும் அரங்கித்திற்கு வரவழைக்கும் வகையில் அவர்களை ஒருங்கினைத்து சென்னை வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக 58 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் Nodal Block Education officer கள் அனைவரும் அவர்தம் பணிநாடுநர்களை தொடர்பு கொண்டு விழா நடைபெறும் அரங்கிற்கு நல்ல முறையில் அழைத்து வரும் பணியினை மேற்கொள்ளுமாறு 58 Nodal Block Education officer கள் உடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இந்த 58 Nodal Block Education officer களும் 24,07,2025 அன்று காலை 8.00 மணிக்குள் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , இவ்விழாவில் இதர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் இதர வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 23.07.2025 காலை 11 அளவில் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் .. இப்பணிகள் சிறப்புடன் தொய்வின்றி நடைபெறும் வகையில் அனைவரும் வருகைதந்து , விழாவினை செவ்வனே நடத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



Nodal DEOs & BEOs விவரம்...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா  அழைப்பிதழ் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Teachers' Recruitment & Transfer Counseling Information

 

ஆசிரியர் பணி நியமன & மாறுதல் கலந்தாய்வு தகவல்கள்


Teachers' Recruitment & Transfer Counseling Information


💥 ஜூலை 14 முதல் 18 வரை இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு


💥 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு


ஜூலை 19 ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள்


ஜூலை 21 மாவட்டம் விட்டு மாவட்டம் 


💥 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு


ஜூலை 22 ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள்


ஜூலை 23 மாவட்டம் விட்டு மாவட்டம் 


💥 பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 


ஜூலை 24 ஒன்றியத்திற்குள் 

ஜூலை 25 மாவட்டத்திற்குள் 


ஜூலை - 26,28,29,30 மாவட்டம் விட்டு மாவட்டம்


Karur District Secondary Grade Teacher Vacancies

 


   இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறைவடைந்தது. மீதி உள்ள காலிப்பணியிடங்களுக்கு அடுத்த வாரம் புதிதாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


இடைநிலை ஆசிரியர் மொத்த காலி பணியிடங்கள் 4334.


Karur District Secondary Grade Teacher Vacancies


Final Vacant : கரூர் மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

             

Aravakurichi 33140300603 P.U.E.SCHOOL, PARAPATTI-KARUR 1

Aravakurichi 33140300701 P.U.E.SCHOOL, NANDANUR-KARUR 1

Aravakurichi 33140300802 P.U.E.SCHOOL, SANTHAPPADI-KARUR 1

Aravakurichi 33140300804 P.U.E.SCHOOL, SENGALAIVALASU-KARUR 1

Aravakurichi 33140301004 P.U.E.SCHOOL,MODAKKUR-KARUR 1

Aravakurichi 33140301203 P.U.E.SCHOOL, KUMARAPALAYAM-KARUR 1

Aravakurichi 33140301303 P.U.E.SCHOOL,ERAMANAYAKKANUR-KARUR 1



K.Paramathi 33140401602 P.U.E..SCHOOL, ICHIKKATTUR-KARUR 1



Krishnarayapuram 33140502101 PUMS,POTHURAVUTHANPATTY-KARUR 1

Krishnarayapuram 33140502103 PUPS, SEMPARAIPATTY-KARUR 1

Krishnarayapuram 33140502104 PUPS, AYYAMPALAYAM-KARUR 1

Krishnarayapuram 33140502107 PUPS, AKKARAKKAMPATTY-KARUR 1

Krishnarayapuram 33140502603 PUMS, KUPPAMETTUPATTI-KARUR 3

Krishnarayapuram 33140502604 PUPS, KUPPANDIYUR-KARUR 2

Krishnarayapuram 33140502606 PUPS, NATHIPATTY-KARUR 2

Krishnarayapuram 33140502801 PUPS, THONDAMANGINAM-KARUR 1

Krishnarayapuram 33140502802 PUMS, GOUNDAMPATTY-KARUR 2

Krishnarayapuram 33140502803 PUPS, KARUNGALPATTY-KARUR 1




Kadavoor 33140602006 PUMS, D. IDAYAPATTY-KARUR 1




Kulithalai 33140701405 PUPS,THIMMACHIPURAM-KARUR 1

Kulithalai 33140701506 PUPS,KOMALIPARAI-KARUR 1




Thogaimalai 33140800107 P.U.P.SCHOOL, BOMMANAYAKKAMPATTI-KARUR 2

Thogaimalai 33140800902 P.U.P.SCHOOL, KALLAI-KARUR 1

Thogaimalai 33140801102 P.U.P.SCHOOL, PILLUR-KARUR


Secondary Grade Teachers Vacant List as on 11.7.2025


SG Teachers Final Vacancy List - All Districts


2342 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான அனைத்து மாவட்ட காலிப்பணியிடங்கள் விவரம்


SGT Final Vacancies - All Districts


Secondary Grade Teachers Vacant List as on 11.7.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


District-wise SGT posts to be appointed



மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்:


District-wise Secondary Grade Teacher posts to be appointed


Ariyalur - 24

Chengalpattu - 37

Chennai - 22

Coimbatore - 63

Cuddalore - 86

Dharmapuri - 113

Dindigul - 91

Erode - 107

Kallakurichi - 82

Kancheepuram - 34

Kanniyakumari - 24

Karur - 61

Krishnagiri - 64

Madurai - 122

Mayiladuthurai - 16

Nagapattinam - 53

Namakkal - 50

Perambalur - 23

Pudukottai - 60

Ramanathapuram - 67

Ranipet - 37

Salem - 134

Sivagangai - 59

Tenkasi - 66

Thanjavur - 78

The Nilgiris - 11

Theni - 67

Tuticorin - 64

Tiruchirappalli - 87

Tirunelveli - 35

Tirupathur - 35

Tiruppur - 65

Tiruvallur - 66

Tiruvannamalai - 93

Tiruvarur - 56

Vellore - 33

Villupuram - 60

Virudhunagar - 97


Total = 2342


Appointment of 2342 new Secondary Grade Teachers - DEE Proceedings

 

2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், ஆளறிச் சான்றிதழ் & அறிவுரைகள் - தெரிவுபெற்ற பணி நாடுநர்களின் தரவரிசை எண், கலந்தாய்வு நடைபெறும் நாட்கள், இடம் & நேரம் அறிவிப்பு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு - Director Proceedings


Appointment of 2342 new Secondary Grade Teachers - Guidelines to be followed, Certificate of Identity & Instructions - Rank number of selected job seekers, dates, venue & time of counselling announced - Proceedings of the Director of Elementary Education


தொடக்கக் கல்வி- 2342 புதிய இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - TRB- இடம் மற்றும் நேரம்- நாட்கள் அறிவிப்பு...


ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் - பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண்: 13466/ டி1/ 2025, நாள் : 09-07-2025 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கிராம உதவியாளர் (Village Assistant) நியமனத்திற்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு

 

கிராம உதவியாளர் (Village Assistant) நியமனத்திற்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை (நிலை) எண் : 312, நாள் : 04-06-2025 வெளியீடு


G.O.Ms.No.312, TN Govt Village Assistant Appointment 


Government Order G.O. (Ms) No. 312, Dated: 04-06-2025, providing revised guidelines for the appointment of Village Assistant.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025


 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம் - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025



Directorate of Rural Development and Panchayats - Procedures to be followed during appointment to Government posts filled directly by the District Collector's Personal Assistant (Development) and Panchayat Union Commissioner / Block Development Officers - Commissioner's letter, Dated: 07-05-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Jobs in Anganwadi - Educational Qualification : 10th/12th standard - Monthly Salary Rs. 7700 - Number of vacancies: 7,783 - G.O. Released



அங்கன்வாடியில்  காலியாக உள்ள 7,783 பணியிடங்களை நிரப்புவதற்கு திருத்திய / ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை (நிலை) எண்: 31, நாள் : 12-03-2025 வெளியீடு


G.O. (Ms) No. 31, Dated: 12.03.2025 - Jobs in Anganwadi - Educational Qualification : 10th/12th standard - Monthly Salary Rs. 7700 - Number of vacancies: 7,783 - G.O. Released 


10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு அங்கன்வாடியில்  மாதம் ரூ.7700 ஊதியத்தில் வேலை - காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை : 7,783


Employment in Anganwadi at a monthly salary of Rs. 7700 for those with 10th / 12th standard education qualification - Number of vacancies: 7,783 - Government Order issued with revised / consolidated guidelines



>>> அரசாணை எண்: 31, நாள் : 12-03-2025 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Social Welfare and Women Empowerment Department - Integrated Child Development Services - Revised / Consolidated eligibility criteria for appointment of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper - Permission for filling up 7,783 Vacancies of Anganwadi Worker / Mini Anganwadi Worker / Anganwadi Helper posts through direct recruitment- Granted Orders - Issued.


Social Welfare and Women Empowerment (SW-7(2)) Department

G.O.(Ms)No.31, Dated:12.03.2025


Read:

G.O.(Ms) No.110, Social Welfare and Nutritious Meal Programme Department, dated: 14.05.2012.

G.O.(Ms) No.206, Social Welfare and Nutritious Meal Programme, Department, dated: 04.07.2012.

G.O.(Ms)No.79, Social Welfare and Women Empowerment Department, dated: 09.11.2021,

4. G.O.(Ms) No.87, Social Welfare and Women Empowerment Department, dated:02.12.2021.

From the Government of India, Ministry of Women and Child Development, Letter No.11/4/2021-CD-I (e-95706), dated: 01.08.2022.

G.O.(Ms) No.47, Social Welfare and Women Empowerment Department, dated: 02.08.2022.

G.O.(Ms) No.39, Social Welfare and Women Empowerment Department, dated: 22.06.2023.

The Director cum Mission Director, Integrated Child Development Services Letter Roc.No. No.6094/E3(2)/2022, dated: 12.09.2023.

G.O.(Ms) No.29, Social Welfare and Women Empowerment Department, dated:10.03.2025.


ORDER:

In the Government Order first read above, consolidated eligibility criteria for appointment to the posts of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper under the Integrated Child Development Services were issued.

2. Subsequently, in the Government Orders second, third, fourth and seventh read above, orders have been issued revising/adding certain eligibility criteria for appointment to the posts of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper.

3. The Government of India, in their letter fifth read above, have issued among others certain guidelines prescribing criteria such as age, educational qualification,retirement age, etc., for appointment to the posts of Anganwad Worker and Anganwadi Helper under the Integrated Child Development Services.

4. In the letter eighth read above, the Director cum Mission Director,Integrated Child Development Services has submitted proposal stating that the Government of India has launched new scheme 'Nutrition as well Education'(PBPB), with an objective to improve the quality of education in the Anganwadi centres along with the focus on nutrition. In order to improve the teaching skills,efficient persons are required in Anganwadi centres for which the Anganwadi Worker as well as Anganwadi Helper with higher educational qualification is necessary. The appointed Anganwadi Worker and Anganwadi Helper are expected to impart basic education to the children in a simple and effective manner and to identify their long term suitability, these employees may be appointed on a temporary basis on consolidated pay, after which they may be absorbed on Special time scale for the post of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper.

5. The Director cum Mission Director, Integrated Child Development Services, based on the guidelines of the Government of India, as well as the existing eligibility criteria, has sent a proposal seeking to issue consolidated eligibility criteria for appointment to the posts of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper in order to ensure uniformity in the appointment process and to permit to fill up 3,886 vacancies of Anganwadi Worker post on temporary basis on consolidated pay of Rs.7,700/- per month, 305 vacancies of Mini Anganwadi Worker post on temporary basis on consolidated pay of Rs.5,700/- per month and 3,592 vacancies of Anganwadi Helper post on consolidated pay of Rs.4,100/- per month, totally 7,783 posts in Anganwadi centres, where 21 and above children are attending pre-school education. The Director cum Mission Director, Integrated Child Development Services has also sought for permission to make appointments to the posts of Anganwadi Worker,Mini Anganwadi Worker and Anganwadi Helper as per the revised the eligibility criteria and to bring them into special time scale of pay after completion of twelve months of their work.


After careful examination of the proposal of the Director cum Mission Director, Integrated Child Development Services, the Government issue orders as follows:
Criteria for appointment to the posts of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper shall be as prescribed in the Annexure to this order.
The Director cum Mission Director, Integrated Child Development Services is permitted to fill up the vacant posts in Anganwadi centres where 21 and above children are attending pre-school education duly following the criteria applicable to the posts. The persons so appointed shall be paid a consolidated pay for a period of one year. From the second year onwards, they shall be brought into special time scale of pay applicable to them. The number of vacant posts permitted to be filled up through direct recruitment, the consolidated pay payable for the first year and the special time scale of pay applicable to them from the second year onwards shall be as specified in the table below:-

Table



(By Order of the Governor)

JAYASHREE MURALIDHARAN
SECRETARY TO GOVERNMENT

To
The Director cum Mission Director,
Integrated Child Development Services, Chennai-600113 The Commissioner of Social Welfare, Chennai - 600 005.All District Collectors,
Tle Accountant General, Chennai- 600 018
The Resident Audit Officer, Chennai-600 009.
All District Programme Officers, Integrated Child Development Services (through the
Director cum Mission Director, Integrated Child Development Services,
Chennai -600 113.

Copy to:-
The Chief Minister's Office, Chennai 600 009.
The Special Personal Assistant to the Hon'ble Minister for Finance and Environment
Climate Change, Chennai-600 009.
The Special Personal Assistant to the Hon'ble Minister for Social Welfare.
Women Empowerment), Chennai-600 009.
The Principal Private Secretary to the Secretary to Government, Social Welfare and
Women Development Department, 
Chennai-600 009.
Stock file / Spare Copy,

// Forwarded by order //

Section Officer.

Reduction of 10% Reservation to Secondary Grade Teachers in Appointment of Post Graduate Teachers to 8% - DSE Proceedings, Dated: 21-01-2025 - Attachment: G.O. (Ms) No: 261, Dated : 09-12-2024

 

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இட ஒதுக்கீடு 8% ஆகக் குறைப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 21-01-2025 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 261, நாள் : 09-12-2024


Reduction of 10% Reservation to Secondary Grade Teachers in Appointment of Post Graduate Teachers to 8% - Proceedings of the Director of School Education, Dated: 21-01-2025 - Attachment: Ordinance G.O. (Ms) No: 261, Dated : 09-12-2024


அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடு அடிப்படையில் முதுகலை ஆசிரியராக பணி வழங்கப்படும் நடைமுறையில் `விதித்திருத்தம் செய்யப்பட்ட விவரம்` - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 21-01-2025 - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 261, நாள் : 09-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


B.Lit., degree is eligible for teaching job - Dr. Ramadoss urges Government to declare...

 

பி.லிட்., பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது என அரசு அறிவிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்...


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட்., பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது என அரசு அறிவிக்க மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்...


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானதுதான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை இலக்கியம் (பி.லிட்) படித்து தேர்ச்சி பெற்றவர்களை, அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றும் வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.



தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் 394 தமிழாசிரியர்கள் உள்ளிட்ட 2222 ஆசிரியர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 25.10.2023 ஆம் நாள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பின்னர் பணியிடங்களின் எண்ணிக்கை 518 தமிழாசிரியர்கள் உட்பட மொத்தம் 3192 என அதிகரிக்கப்பட்டது.



இந்த பணிகளுக்கான போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 24 ஆம் நாள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.



தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைபட்சமான முடிவாகும்.



சென்னையில் கடந்த 11.04.2023 ஆம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத் தகுதி நிர்ணயக் குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இம்முடிவு இரு வகைகளில் தவறு.



முதலாவதாக, 06.09.2012 ஆம் நாள் நடைபெற்ற சமத் தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதன்பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சமத்தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் தான் அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், பி.ஏ., தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது அல்ல என தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டங்கள் அனைத்தும் சென்னை பல்கலையின் பி.லிட். தமிழ் இலக்கிய பட்டத்திற்கு இணையானவையாகவே கருதப்பட வேண்டும். அந்த வகையில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்ற அனைவரும் தமிழாசிரியராக நியமிக்கப்பட தகுதியானவர்கள் தான்.



இரண்டாவதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 25.10.2023 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின் 38 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது இணைப்பில் வரிசை எண் இரண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பி.லிட் பட்டங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டத்திற்கு இணையானவை என 20.09.2012 தேதியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது எனும் போது, அண்ணாமலை பல்கலை. பி.லிட் பட்டமும் தகுதியானது தான்.


இவை இரண்டையும் கடந்து பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70, 80% பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்.



அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாதக் காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உண்டு.



எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர்கல்வித்துறை வழங்க வேண்டும், அதன்மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 வெளியீடு...

 

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 வெளியீடு...


Ordinance G.O. (Ms) No: 55, Dated: 30-08-2024 Issued for the creation of new posts for the implementation of the Nutrition Scheme for the newly created 6 districts of Chengalpattu, Ranippettai, Mayiladuthurai, Tirupattur, Tenkasi and Kallakurichi...



>>> அரசாணை (நிலை) எண் : 55, நாள்: 30-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட உயர்நீதிமன்றம் தடை...


பட்டதாரி ஆசிரியர்  பணி நியமனப் பட்டியல் வெளியிட உயர்நீதிமன்றம் தடை...


பள்ளிக் கல்வித்துறையில்  காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான  போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடந்தது. 


இந்த  பணி நியமன தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 24 வினாக்கள் தவறாக இருப்பதால்   இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.


எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை தாள் அடிப்படையில்,  பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.


வல்லுந‌ர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் ஆகி இருந்தது.


இந்த மனுக்ககளை விசாரித்த நீதிபதி மஞ்சுளா இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 வெளியீடு (Raising the age limit for direct appointment of Teachers - School Education Department (V. Se.1) Ordinance G.O.(Ms) No: 185, Dated: 21-10-2023)...


ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 வெளியீடு (Raising the age limit for direct appointment of Teachers - School Education Department (V. Se.1) Ordinance G.O.(Ms) No: 185, Dated: 21-10-2023)...


>>> பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர் பணி - வயது வரம்பு உயர்வு 


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.


 பொதுப்பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயதாகவும், இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்வு.


ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாணை வெளியீடு.


முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்தும், பணி நியமன உச்ச வயது வரம்பை ஒருமுறை மட்டும் உயர்த்தியும் அரசாணைகள் (நிலை) எண்: 146 மற்றும் 147, நாள்: 22-08-2023 வெளியீடு (G.O. (Ms) No: 146 and 147, Dated: 22-08-2023 - Fixing the weightage on the basis of the year of passing TET for the appointment of Secondary Grade Teachers / Graduate Teachers (B.T.Assistants) and raising the upper age limit only once for appointment)...

 

 இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்தும், பணி நியமன உச்ச வயது வரம்பை ஒருமுறை மட்டும் உயர்த்தியும் அரசாணைகள் (நிலை) எண்: 146 மற்றும் 147, நாள்: 22-08-2023 வெளியீடு (G.O. (Ms) No: 146 and 147, Dated: 22-08-2023 - Fixing the weightage on the basis of the year of passing TET for the appointment of Secondary Grade Teachers / Graduate Teachers (B.T.Assistants) and raising the upper age limit only once for appointment)...




தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET is Mandatory) எனும் குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (Judgement of Madras High Court Madurai Branch - W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022 (The minimum qualification of a pass in TET for being appointed as elementary school teacher is mandatory and no exemption whatever can be claimed by any individual and to that extent the decision in Vasudevan’s case has laid down the correct law) W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022)...


>>> தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET is Mandatory) பெறுவதற்கான குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (Judgement of Madras High Court Madurai Branch - W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022 (The minimum qualification of a pass in TET for being appointed as elementary school teacher is mandatory and no exemption whatever can be claimed by any individual and to that extent the decision in Vasudevan’s case has laid down the correct law) W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அஞ்சலக GDS நியமனங்கள் - தமிழ்நாடு தேர்வர்களின் தவிப்பிற்கு தீர்வு - நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்களிடம் அஞ்சல்துறை இயக்குனர் தொலைபேசியில் உறுதி (Post Office Gramin Dak Sevak Appointments - Tamil Nadu Candidates' Distress Resolved - Director of Posts confirmed to Member of Parliament Mr. Su.Venkatesan over phone)...


அஞ்சலக GDS நியமனங்கள் - தமிழ்நாடு தேர்வர்களின் தவிப்பிற்கு தீர்வு - நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்களிடம் அஞ்சல்துறை இயக்குனர் தொலைபேசியில் உறுதி (Post Office Gramin Dak Sevak Appointments - Tamil Nadu Candidates' Distress Resolved - Director of Posts confirmed to Member of Parliament Mr. Su.Venkatesan over phone)...


Garmin Dak Sevak (GDS) காலியிடங்களுக்கு ஜனவரி 27 முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும்  அதைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள். 


இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167. 


10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சினை இல்லை. 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் 6வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை. 


நான் அஞ்சல் துறை செயலாளர் திரு வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு இது குறித்து கடிதங்களை எழுதி இருந்தேன். 


இன்று என்னிடம் அலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசி சர்மா அவர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6 வதாக உள்ள "தெரிவு மொழி" பகுதி தமிழ்நாடு தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும், விண்ணப்ப கடைசி தேதி மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 


அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.


தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன்.

- சு.வெங்கடேசன்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings : Relieve the transferred SGTs and allow the newly appointed Teachers to join the service on 25.07.2025

மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யவும், புதிதாக பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை 25.07.2025 அன்று பணியில் ச...