கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் 4 மணி நேரம் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை...

 


பள்ளிக் கல்வி துறையின் நிர்வாக சிக்கல்கள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களுடன் நான்கு மணி நேரம் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வி துறை நிர்வாக பணிகள் , மாணவர் சேர்க்கை , பாடப்புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினர்.


வீடியோ கான்பரன்ஸ் முறையில் பகல் , 1:45 மணிக்கு துவங்கிய கூட்டம் , நான்கு மணி நேரம் நடந்தது . பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் , திட்ட அதிகாரி சுதன் , இயக்குநர்கள் கண்ணப்பன், கருப்ப சாமி , உஷாராணி , ராமேஸ்வர முருகன் , பழனிசாமி மற்றும் இணை இயக்குநர்கள் , சென்னையில் உள்ள டி.பி.ஐ. , வளாகத்தில் , அமைச்சருடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.


 பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா , தலைமை செயலகத்தில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றார் . ‘ கொரோனா சூழலை கருத்தில் கொண்டு , மாணவர்களுக்கு , ஆன்லைன் மற்றும் கல்வி , ‘ டிவி வழியே பாடங்களை நடத்துவதில் , முழு கவனம் செலுத்த வேண்டும். 


அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என , அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார். நிர்வாக பணிகளை , EMIS ‘ என்ற டிஜிட்டல் தளம் வழியே மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை , நிதித்துறையின் மேலாண்மை தளம் வழியே மேற்கொள்ள வேண்டும். இனி நேரடியான நிதி பரிவர்த்தனைகள் கூடாது. நிர்வாக பணிகளில் , எந்த சிக்கலும் இல்லாமல் , அரசின் உத்தரவுக்கு ஏற்ப சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் ‘ என , முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...