கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10, 12ஆம் வகுப்பு தேர்வுக்கான தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்...



 தேர்வு கட்டணத்தை திருப்பி தருதல் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தி வரும் நிலையில், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெரும்பாலான மாநிலங்கள் 10 மற்றும் 12ம் வகுப்பின் பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டன. அதேப்போன்று மத்திய கல்வி வாரியங்களும் தேர்வை ரத்து செய்தது.


இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையை மாணவர்களிடமே திருப்பி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் கிடையாது. ஏனெனில் தேர்வுகளுக்குகான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்னர் தான் கடைசி நேரத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கான செலவுகள் அனைத்தும் மாநில அரசுகள் கண்டிப்பாக மேற்கொண்டு இருக்கும். அதனால் இந்த விவகாரத்தில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prize giving ceremony for CM Trophy sports competitions

  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுதல் : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கடிதம் Prize giv...